CSK : சி.எஸ்.கே அணிக்காக அவர் ஆடற ஆட்டத்தை பாத்தா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு – பிராவோ பேட்டி

Bravo
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி துவங்கிய நடப்பு 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது ஏப்ரல் மாதத்தின் இறுதியை எட்டியுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் பல கோடிகளுக்கு எடுக்கப்பட்ட இளம் வீரர்கள் சொதப்பி வரும் பட்சத்தில் சில லட்சங்களில் மட்டுமே வாங்கப்பட்ட அனுபவ வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடியவர்கள். அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் மினி ஏலத்தில் கொல்கத்தா அணியிலிருந்து கழட்டிவிடப்பட்ட ரகானே தற்போது 50 லட்சம் ரூபாய் என்கிற அடிப்படை விலையில் சென்னை அணிக்காக ஒப்பந்தமாகி சிறப்பாக விளையாடி வருகிறார்.

Rahane and Conway

- Advertisement -

ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் ரஹானேவிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் இடையில் கிடைத்த வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்திய ரஹானே மூன்றாவது இடத்தில் களமிறங்கி அதிரடியாக ரன்களை குவித்து வருகிறார்.

அதிலும் குறிப்பாக இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி சார்பாக அதிவேக அரை சதத்தையும் அவர் விளாசி அசத்தியிருந்தார். கொல்கத்தா அணிக்கு எதிராக கடைசியாக நடைபெற்ற போட்டியில் 29 பந்துகளில் 71 அடித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

Rahane CSK

இப்படி அவரது தொடர்ச்சியான சிறப்பான செயல்பாடு காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷித் தொடருக்கான இறுதிப் போட்டியிலும் அவருக்கு இடம் கிடைத்துள்ளது. இந்நிலையில் சென்னை அணியில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் வீரர் பிராவோ ரகானேவின் இந்த புதிய பரிமாணம் குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : இந்தியாவில் உள்ள சிறந்த வீரர்களில் ரகானேவும் ஒருவர். ஆரம்பத்தில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடும்போதே நான் அவரது பெரிய ரசிகன். தற்போது எங்கள் அணியில் இடம் பிடித்து அவர் ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரிடம் உள்ள திறமையை மதித்து சிஎஸ்கே அணியும் அவரை சுதந்திரமாக விளையாட அனுமதித்துள்ளது.

இதையும் படிங்க : RCB vs KKR : மறுபடியும் ஆர்.சி.பி கேப்டனாக இருப்பது பற்றி டாஸின் போது பேசிய கிங் கோலி – என்ன சொன்னாரு தெரியுமா?

அவர் மீது அழுத்தம் எதையும் கொடுக்காததால் தற்போது ரகானே மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் சிஎஸ்கே அணிக்காகவும், இந்திய அணிக்காகவும் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என பிராவோ கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement