RCB vs KKR : மறுபடியும் ஆர்.சி.பி கேப்டனாக இருப்பது பற்றி டாஸின் போது பேசிய கிங் கோலி – என்ன சொன்னாரு தெரியுமா?

Kohli
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 36-வது லீக் போட்டியானது பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், நிதீஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது.

RCB vs KKR

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்தது. கொல்கத்தா அணி சார்பாக துவக்க வீரர் ஜேசன் ராய் 56 ரன்களையும், நிதீஷ் ராணா 48 ரன்களையும் குவித்தனர்.

பின்னர் 201 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது பெங்களூரு அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியிலும் டூப்ளிசிஸ் இம்பேக்ட் வீரராக விளையாடியதால் விராட் கோலி மீண்டும் கேப்டனாக விளையாடி வருகிறார்.

Virat Kohli RCB Captain

இந்நிலையில் இன்றைய போட்டியின் போது டாசில் வெற்றி பெற்ற கோலி பந்துவீச்சை தேர்வு செய்த பிறகு கேப்டனாக இருப்பது குறித்த சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து பேசிய கோலி கூறுகையில் :

- Advertisement -

மீண்டும் கேப்டனாக செயல்படுவது ஜாலியாக இருக்கிறது. ஏனென்றால் ஒரு அணியாக நாம் விளையாடும் போது அந்த அணி நன்றாக செயல்பட்டால் மிக மகிழ்ச்சியாக இருக்கும். அதேபோன்று கேப்டனாக இருந்தால் கூடுதல் மகிழ்ச்சியை தரும். சில நேரங்களில் கேப்டன்சியில் என்னுடைய உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அதைக் கேட்டு தான் முடிவு செய்கிறேன்.

இதையும் படிங்க : IPL 2023 : பாவம் அவரு வாங்குன அடில உடம்பு சரில்லாம ஒரே நாளில் 7 – 8 கிலோ குறைஞ்சுட்டாரு – குஜராத் வீரர் பற்றி பாண்டியா பேட்டி

நிச்சயம் அடுத்த போட்டியில் டூபிளெஸ்ஸிஸ் வந்துவிடுவார் என்று நினைக்கிறேன். அதுவரை இந்த கேப்டன்சியை நான் மகிழ்ந்து செயல்பட்டு வருகிறேன் என விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement