இப்படி பேசுற நீங்க 7 – 8 நாள்ல அப்படி பேசுவீங்க.. இந்திய அணியை மறைமுகமாக எச்சரித்த மெக்கல்லம்

Brendon Mccullum 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் டி20 போல அதிரடியாக விளையாடி வெல்வோம் என்று இங்கிலாந்து அணியினர் ஆரம்பத்திலேயே எச்சரித்தனர். அதை முதல் போட்டியில் செய்தும் காட்டிய இங்கிலாந்து ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றது. ஆனால் அதற்கடுத்த 2 போட்டிகளில் படுதோல்வியை சந்தித்த இங்கிலாந்து தொடரில் பின்தங்கியுள்ளது.

குறிப்பாக ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற அந்த அணி 21ஆம் நூற்றாண்டில் தங்களுடைய மிகப்பெரிய தோல்வியை பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது. மேலும் சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல் விளையாடாமல் அதிரடியாகவே விளையாடுவோம் என்று ஒற்றைக்காலில் நிற்கும் அந்த அணி மைக்கேல் வாகன் போன்ற முன்னாள் இங்கிலாந்து வீரர்களிடம் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.

- Advertisement -

அப்படி பேசுவீங்க:
இந்நிலையில் 4வது போட்டியில் வென்று இந்தியா மீது அழுத்தத்தை போட்டு தொடரை சமன் செய்வோம் என்று இங்கிலாந்தின் பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கல்லம் கூறியுள்ளார். எனவே இன்று தங்களை விமர்சிப்பவர்கள் இன்னும் 7 – 8 நாட்களில் 2 – 2* (5) என்ற கணக்கில் இருக்கப் போகும் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 5வது போட்டியில் வெல்லப்போவது யார் என்பதை பற்றி பேசுவார்கள் என்றும் மெக்கல்லம் கூறியுள்ளார்.

இது பற்றி பிபிசி ஸ்போர்ட் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் ஆட்டத்தை திருப்பி இந்தியாவை அழுத்தத்திற்கு உள்ளாக்க முயற்சிப்போம். எனவே 7 அல்லது 8 நாட்களில் நாம் வெற்றியாளரை தீர்மானிக்கும் 5வது போட்டி எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பற்றி உற்சாகமாக பேசுவோம் என நம்புகிறேன். எங்களுடைய ஆட்டம் நன்றாக அல்லது மோசமானதாக இருந்தாலும் மக்கள் அவருடைய கருத்துக்களை தெரிவிப்பார்கள்”

- Advertisement -

“அது நாங்கள் அதை கேட்கிறோமா இல்லையா என்பதைப் பொறுத்ததாகும். எங்களுடைய உடை மாற்றும் அறை வலுவாக இருக்கிறது. எங்களுடைய வீரர்கள் களத்திற்கு சென்று தங்களுடைய திறமையை செழிக்க தயாராக இருக்கின்றனர். எனவே வெளிப்புற விமர்சனங்கள் உள்ளே வர அனுமதித்தால் அதுதான் எங்களுடைய பிரச்சனையாகும். இப்போதும் எங்களுடைய அணியில் முன்னேறுவதற்கு சில அம்சங்கள் இருக்கிறது”

இதையும் படிங்க: 2 அட்டவணை வரும்.. ஐபிஎல் 2024 தொடர் துவங்கும் இடம், தேதியை இப்போதே வெளியிட்ட சேர்மேன்

“ஆனால் கடந்த 18 மாதங்களுக்கு முன்பிருந்ததை விட தற்போது நாங்கள் சிறந்த அணியாக இருக்கிறோம். எனவே எங்களுடைய அணுகு முறையை நாங்கள் குறைக்கவில்லை. அடுத்த 2 போட்டிகளுக்காக நான் ஆர்வத்துடன் இருக்கிறேன். ஒருவேளை நாங்கள் இதிலிருந்து கம்பேக் கொடுத்தால் எங்கள் அணி எந்த இடத்திற்கு செல்ல தொடங்குகிறது என்பதை அறிவோம். அதாவது எங்களால் தொடரை வெல்ல முடியும்” என்று இந்தியாவுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement