புதிய ப்ளேயர் தயார்.. 2வது டெஸ்டில் இந்தியாவை வீழ்த்த அவரை இறக்கப் போறோம்.. எச்சரித்த மெக்கல்லம்

Brendan Mccullam
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் அற்புதமான வெற்றி பெற்றது. ஏனெனில் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதல் 3 நாட்கள் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி இங்கிலாந்தை விட 190 ரன்கள் முன்னிலை பெற்றிருந்ததால் கண்டிப்பாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 2வது இன்னிங்சில் ஓலி போப் அபாரமான சதமடித்து 196 ரன்கள் குவித்ததை பயன்படுத்திய இங்கிலாந்து 231 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. அதை 4வது நாளில் சுழலுக்கு சாதகமாக மாறிய ஹைதராபாத் பிட்ச்சில் சேசிங் செய்ய விடாத டாம் ஹார்ட்லி 7 விக்கெட்டுகள் சாய்த்து இந்தியாவை 202 ரன்களுக்கு சுருட்டி மகத்தான வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

புதிய ப்ளேயர்:
மறுபுறம் 100க்கும் மேற்பட்ட ரன்களை முன்னிலையாக பெற்றும் சொந்த மண்ணில் முதல் முறையாக அவமான தோல்வியை பதிவு செய்த இந்தியா 2வது போட்டியில் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் போட்டியில் அறிமுகமாகி வெற்றியை பெற்றுக் கொடுத்த டாம் ஹார்ட்லி போல 2வது போட்டியில் மற்றொரு அறிமுக வீரர் சோயப் பஷீரை களமிறக்கி இந்தியாவை தோற்கடிக்கும் திட்டத்தை வைத்திருப்பதாக இங்கிலாந்து பயிற்சி ப்ரெண்டன் மெக்கல்லம் கூறியுள்ளார்.

அதை விட வேகப்பந்து வீச்சாளர்களே இல்லாமல் 5 பவுலர்களும் முழுமையாக ஸ்பின்னர்களாக களமிறக்கும் திட்டத்தையும் வைத்திருப்பதாக தெரிவிக்கும் இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அபுதாபியில் நடைபெற்ற பயிற்சி முகாமில் எங்களுடன் இருந்த அவர் எங்களது அணியில் நன்றாக பொருந்தினார். அவர் தன்னுடைய திறமையால் இம்ப்ரஸ் செய்தார். அழகான இளம் வயதில் குறைவான முதல் தர போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர் உற்சாகம் மிகுந்த பையன்”

- Advertisement -

“டாம் ஹார்ட்லியை போலவே இந்தியாவில் உள்ள சூழ்நிலைகளில் அவர் எங்களுக்கு உதவக் கூடும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவர் சந்தித்த விசா பிரச்சனை சில நேரங்களில் நடக்கக் கூடியதாகும். இருப்பினும் முதல் டெஸ்ட் போட்டியில் எங்களுடைய அணியில் இணைந்த அவர் எங்கள் ஸ்பின்னர்கள் பெற்றுக் கொடுத்த மகத்தான வெற்றியை பார்த்தார்”

இதையும் படிங்க: 37 வயசான அவரால ஒன்னும் முடியாது.. இந்தியாவை சாய்க்க இங்கிலாந்துக்கு கோல்டன் சான்ஸ் கிடைச்சுருக்கு.. ஜெஃப்ரி பாய்காட் 

“அவரும் அடுத்த டெஸ்ட் போட்டிக்கான எங்களுடைய கணக்கில் இருக்கிறார். குறிப்பாக முதல் டெஸ்ட் போட்டியை போலவே இத்தொடரின் அடுத்து வரும் போட்டிகளிலும் பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் ஹைதராபாத் போல முழுமையாக ஸ்பின்னர்களுடன் களமிறங்குவதற்கு நாங்கள் தயங்க மாட்டோம். சிறந்த இளம் வீரரான அவர் போட்டியில் அசத்தக்கூடிய ஆளுமை பெற்றவர்” என்று கூறினார்.

Advertisement