- Advertisement -
இந்திய கிரிக்கெட்

2 வேலையையும் கச்சிதமா செய்ற.. அவருக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கு.. இளம் வீரரை பாராட்டிய ப்ராட் ஹோக்

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்ற இந்தியா 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக கடந்த போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்து இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்தது.

முன்னதாக இந்த தொடரில் ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் போன்ற இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றி வருகிறார்கள். அதே போல விக்கெட் கீப்பராக விளையாடி வந்த கேஎஸ் பரத் கீப்பிங் செய்வதில் அசத்தினாலும் பேட்டிங்கில் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினார். மேலும் 7 போட்டிகளில் 221 ரன்களை 20.09 என்ற மோசமான சராசரியில் எடுத்த அவர் ஒரு அரை சதம் கூட அடித்ததில்லை.

- Advertisement -

ஒளிமயமான எதிர்காலம்:
எனவே அவரை மூன்றாவது போட்டியில் நீக்கிய இந்திய அணி நிர்வாகம் இளம் வீரர் துருவ் ஜுரேலுக்கு வாய்ப்பு கொடுத்தது. அந்த வாய்ப்பில் முதல் இன்னிங்ஸில் 46 ரன்கள் அடித்து அசத்திய அவர் ஒரு கேட்ச் மற்றும் ரன் அவுட் செய்து நன்றாக செயல்பட்டார். குறிப்பாக பேட்டிங்கில் கேஎஸ் பரத்தை விட அவர் தடுமாற்றமின்றி விளையாடியது ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது.

இந்நிலையில் கீப்பிங் மற்றும் பேட்டிங் ஆகிய 2 வேலைகளிலும் கச்சிதமாக செயல்படும் துருவ் ஜுரேலுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹோக் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “ஜுரேல் ஆட்டம் என்னை மிகவும் கவர்ந்தது. கேஎஸ் பரத்திற்காக வருந்துகிறேன்”

- Advertisement -

“ஆனால் ஜுரேல் பேட்டிங் மற்றும் கீப்பிங் ஆகிய இரண்டிலும் அதிகமான நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறார். அவர் ஒளிமயமான எதிர்காலத்தை சந்திக்கப் போகிறார். இருப்பினும் அது ரிஷப் பண்ட் முழுமையாக ஃபிட்டாகி அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் எப்படி விளையாடுகிறார் என்பதை பொறுத்து அமையும்”

இதையும் படிங்க: 2 வேலையையும் கச்சிதமா செய்ற.. அவருக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கு.. இளம் வீரரை பாராட்டிய ப்ராட் ஹோக்

“இந்த தொடரில் இந்தியா இளம் வீரர்களை மட்டுமே கொண்டிருக்கிறது என்ற எண்ணத்துடன் இங்கிலாந்து வேகமாக பேட்டிங் செய்து தங்களுடைய பவுலர்கள் 20 விக்கெட்டுகள் எடுப்பதற்கான நேரத்தை விரைவாக வழங்க முயற்சிக்கிறது. இருப்பினும் அவர்களை ஜெய்ஸ்வால் நொறுக்கினார். குறிப்பாக சர்பராஸ் கானுடன் சேர்ந்து அவர் விளையாடிய ஆட்டம் இங்கிலாந்தை பெரிய அழுத்தத்திற்கு உள்ளாக்கியது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இத்தொடரின் 4வது போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -