4 ஆவது டெஸ்ட் போட்டியை காண நேரில் வருவாரா தோனி? ராஞ்சி போட்டி ஏற்படுத்திய சுவாரசியம் – விவரம் இதோ

Dhoni
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியது.

இதன் காரணமாக தற்போது இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணியானது நாளை பிப்ரவரி 23-ஆம் தேதி ராஞ்சி நகரில் நடைபெற இருக்கும் நான்காவது டெஸ்ட் போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகிறது.

- Advertisement -

இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்திய அணி முனைப்பு காட்டும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. அதேபோன்று தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் இந்த போட்டி நடைபெற இருப்பதால் இந்த போட்டியை காண நேரில் தோனி வருவாரா? என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அதேபோன்று இந்திய அணியின் வீரர்களும் அவரின் வருகைக்காக காத்திருக்கிறார்கள் என்றும் தெரிகிறது. பொதுவாகவே தான் ஓய்வு பெற்றதில் இருந்து எந்த போட்டியையும் மைதானத்தில் வந்து தோனி நேரில் பார்ப்பது வழக்கம் கிடையாது.

- Advertisement -

இருப்பினும் சொந்த ஊரில் போட்டிகள் நடைபெற்றால் இந்திய வீரர்களை அவர் சந்திப்பது வழக்கம். அந்த வகையில் ஏற்கனவே கடைசியாக ஹார்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி டி20 போட்டியில் ராஞ்சியில் விளையாடும்போது தோனி நேரில் வந்து இந்திய வீரர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கி ஊக்கப்படுத்தி இருந்தார்.

இதையும் படிங்க : சென்னையில் துவங்கும் ஐபிஎல் 2024 : முதல் போட்டியில் சிஎஸ்கே – ஆர்சிபி.. முதல் 21 போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு

அந்த வகையில் நிச்சயம் இந்த டெஸ்ட் போட்டியின் போதும் ஏதாவது ஒரு நாளில் தோனி மைதானத்திற்கு வந்து இந்திய வீரர்களுடன் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு எதிர்வரும் ஐபிஎல் தொடருக்காக தற்போது அவர் ராஞ்சி மைதானத்தில் தான் பயிற்சி செய்து வருவதால் நிச்சயம் இந்திய அணி வீரர்களை அவர் சந்திப்பார் என்றே கூறப்படுகிறது.

Advertisement