சென்னையில் துவங்கும் ஐபிஎல் 2024 : முதல் போட்டியில் சிஎஸ்கே – ஆர்சிபி.. முதல் 21 போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு

IPL 24
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் 2024 சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி கோலாகலமாக துவங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இம்முறை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் இந்த தொடர் முழுவதுமாக இந்திய மண்ணில் நடைபெறுமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் 2011 போலவே இம்முறையும் இந்த தொடர் முழுவதுமாக இந்தியாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தேர்தல் நடைபெற உள்ளதால் அதை மையப்படுத்தி இம்முறை முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணையை மட்டுமே தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன் படி மார்ச் 22ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் துவங்கும் இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

- Advertisement -

ஐபிஎல் அட்டவணை:
பொதுவாகவே வரலாற்றில் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகள் பகல் நேரத்தில் 3 அல்லது 3.30 மணிக்கு மட்டுமே துவங்கின. அதே போல இரவு நேர போட்டிகள் 7, 7.30 அல்லது 8 மணிக்கு கூட துவங்கியதை பார்த்துள்ளோம்.

அந்த வரிசையில் இம்முறை பகல் நேர போட்டிகள் மதியம் 3.30 மணிக்கும் இரவு நேர போட்டிகள் மாலை 7.30 மணிக்கும் துவங்கும் என்று அறிவித்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஐபிஎல் 2024 டி20 தொடரின் முதல் 21 போட்டிகளுக்கான முழுமையான அட்டவணை பின்வருமாறு.

- Advertisement -

1. மார்ச் 22, மாலை 7.30 : சென்னை – பெங்களூரு, சென்னை
2. மார்ச் 23, பிற்பகல் 3.30 : பஞ்சாப் – டெல்லி, மொகாலி
3. மார்ச் 23, மாலை 7.30 : கொல்கத்தா – ஹைதராபாத், கொல்கத்தா
4. மார்ச் 24, பிற்பகல் 3.30 : ராஜஸ்தான் – லக்னோ, ஜெய்ப்பூர்
5. மார்ச் 24,மாலை 7.30 : குஜராத் – மும்பை, அகமதாபாத்
6. மார்ச் 25, மாலை 3.30 : பெங்களூரு – பஞ்சாப், பெங்களூரு
7. மார்ச் 26 மாலை 7.30 : சென்னை – குஜராத், சென்னை
8. மார்ச் 27, மாலை 7.30 : ஹைதராபாத் – மும்பை, ஹைதராபாத்
9. மார்ச் 28, மாலை 7.30 : ராஜஸ்தான் – டெல்லி, ஜெய்ப்பூர்
10. மார்ச் 29, மாலை 7.30 : பெங்களூரு – கொல்கத்தா, பெங்களூரு
11. மார்ச் 30, மாலை 7.30 : லக்னோ – பஞ்சாப், லக்னோ
12. மார்ச் 31, பிற்பகல் 3.30 : குஜராத் – ஹைதராபாத், அகமதாபாத்

இதையும் படிங்க: நாளைய 4 ஆவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணிக்காக ஒரு புது வீரர் அறிமுகமாக வாய்ப்பு – யார் தெரியுமா?

13. மார்ச் 31 மாலை 7.30 : டெல்லி – சென்னை, விசாகப்பட்டினம்
14. ஏப்ரல் 1, மாலை 7.30 : மும்பை – ராஜஸ்தான், மும்பை,
15. ஏப்ரல் 2, மாலை 7.30 : பெங்களூரு – லக்னோ, பெங்களூரு
16. ஏப்ரல் 3, மாலை 7.30 : டெல்லி – கொல்கத்தா, விசாகப்பட்டினம்
17. ஏப்ரல் 4, மாலை 7.30 :குஜராத் – பஞ்சாப், அகமதாபாத்
18. ஏப்ரல் 5, மாலை 7.30 : ஹைதராபாத் – சென்னை, ஐதராபாத்
19. ஏப்ரல் 6, மாலை 7.30 : ராஜஸ்தான் – பெங்களூரு, ஜெய்ப்பூர்
20. ஏப்ரல் 7, பிற்பகல் 3.30 : மும்பை – டெல்லி, மும்பை
21. ஏப்ரல் 7, மாலை 7.30 : லக்னோ – குஜராத், லக்னோ

Advertisement