நாளைய 4 ஆவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணிக்காக ஒரு புது வீரர் அறிமுகமாக வாய்ப்பு – யார் தெரியுமா?

IND-vs-ENG
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் ஏற்கனவே நிறைவடைந்த வேளையில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

அதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது பிப்ரவரி 23-ஆம் தேதி நாளை ராஞ்சி நகரில் துவங்க இருக்கிறது. இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஏற்கனவே இந்திய அணியில் மூன்று புதுமுக வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது.

- Advertisement -

அந்தவகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியின் போது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ரஜத் பட்டிதார் அறிமுகமாகியிருந்தார். அதனைத்தொடர்ந்து மூன்றாவது போட்டியில் சர்பராஸ் கான் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜுரேல் ஆகியோரும் அறிமுகமாகியிருந்தனர்.

இந்நிலையில் எதிர்வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் மேலும் இந்திய அணிக்காக ஒரு வீரர் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஏற்கனவே இந்த தொடரில் இடம் பெற்றிருந்த முகமது ஷமி காயம் காரணமாக அணியில் இடம்பெற முடியாமல் போனதால் மாற்று வீரராக ஆகாஷ் தீப்பிற்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

- Advertisement -

இந்நிலையில் நாளைய நான்காவது போட்டியில் பும்ரா ஓய்வின் காரணமாக முகேஷ் குமார் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை முகேஷ் குமாரை விளையாட வைக்காமல் புதுமுக வீரனான ஆகாஷ் தீப்பை இந்திய அணி அறிமுக பந்து வீச்சாளராக பயன்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இதையும் படிங்க : ஐ.பி.எல் 2024-ல் இருந்து விலகிய முகமது ஷமி.. அப்படி என்ன பிரச்சனை தெரியுமா? – விவரம் இதோ

டெல்லியை சேர்ந்த 27 வயதான இளம் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் கடந்த 2022-ஆம் ஆண்டு பெங்களுர் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் அணிக்காக அறிமுகமாகி 7 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதோடு உள்ளூர் போட்டிகளிலும் அவர் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement