- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இங்கிலாந்து மண்ணில் அவரது பந்துவீச்சு எடுபடாது.. அதனால் குல்தீப் யாதவை கொண்டுவாங்க – பிராட் ஹடின் பேட்டி

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட மிகப்பெரிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அசத்தியது. அதன் காரணமாக இந்த தொடரின் ஆரம்பத்திலேயே ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.

குல்தீப் யாதவை பிளேயிங் லெவனுக்குள் கொண்டு வாங்க : பிராட் ஹடின்

முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக இந்திய அணி ஜூலை 2-ஆம் தேதி எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற இருக்கும் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. ஏற்கனவே இந்திய அணி இந்த தொடரின் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்ததால் இரண்டாவது போட்டியில் சில மாற்றங்களுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

மேலும் இந்திய அணி வெற்றி பாதைக்கு திரும்ப என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான பிராட் ஹடினும் இரண்டாவது போட்டியில் இந்திய அணி செய்ய வேண்டிய மாற்றம் குறித்து பேசியுள்ளார்.

அந்த வகையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவை இரண்டாவது சுழற்பந்து வீச்சாளராக வைத்துக்கொண்டு முதன்மை சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவை கொண்டுவர வேண்டும் என்ற கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ரவீந்திர ஜடேஜா இங்கிலாந்து மண்ணில் பந்துவீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் அல்ல. அதனால் குல்தீப் யாதவை கொண்டுவர வேண்டும். ஏனெனில் ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சு இந்திய ஆடுகளங்களில் தான் சிறப்பாக இருக்கும்.

- Advertisement -

வெளிநாட்டு மண்ணில் அவருக்கு பெரியளவில் உதவி கிடைக்காது. இருந்தாலும் அவரை நான் சாதாரண வீரர் என்று கூற முடியாது. ஏனெனில் அவர் ஒரு மிகச் சிறப்பான ஆல்ரவுண்டர். எனவே அவரை அணியில் இரண்டாவது சுழற்பந்து வீச்சாளராக வைத்துக் கொள்ளலாம். அதேவேளையில் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவை கொண்டுவர வேண்டும்.

இதையும் படிங்க : இரண்டாவது போட்டியில் ஏமாற்றிய ஆயுஷ் மாத்ரே.. மீண்டும் பொளந்து கட்டிய வைபவ் சூர்யவன்ஷி – விவரம் இதோ

ஏனெனில் அவரால் வெளிநாட்டு ஆடுகளங்களிலும் மிகச் சிறப்பாக அட்டாக் செய்து பந்துவீச முடியும். மேலும் அவர் ஒரு விக்கெட் டேக்கர் என்பதனால் அவரை பிளேயிங் லெவனில் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக விளையாட வைக்க வேண்டும். அதேபோன்று நிதீஷ் ரெட்டியும் அணிக்குள் வந்தால் அது இந்திய அணிக்கு கூடுதல் பலம் என பிராடு ஹடின் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -