இரண்டாவது போட்டியில் ஏமாற்றிய ஆயுஷ் மாத்ரே.. மீண்டும் பொளந்து கட்டிய வைபவ் சூர்யவன்ஷி – விவரம் இதோ

Vaibhav and Mhatre
- Advertisement -

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 19 வயதுக்கு உட்பட்டோர் இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து 19 வயதுக்கு உட்பட்டோர் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட யூத் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் இந்த சுற்றுப்பயணத்தின் முதல் தொடராக ஒருநாள் ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.

தொடர்ந்து அசத்தும் வைபவ் சூர்யவன்ஷி :

ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது இங்கிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி இன்று நார்த்தாம்ப்டன் நகரில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஜூன் 30-ம் தேதி துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியானது முதலில் விளையாடி வருகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சி.எஸ்.கே வீரர் ஆயுஷ் மத்ரேவும், துவக்க வீரராக வைபவ் சூரியவன்ஷியும் விளையாடுவதால் இந்த தொடரின் மேலான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது.

- Advertisement -

இவ்வேளையில் இந்த இரண்டாவது போட்டியில் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆயுஷ் மாத்ரே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொருபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி 34 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரி, 3 சிக்சர் என 45 ரன்கள் குவித்து அசத்தினார்.

இதையும் படிங்க : ஜடேஜா அங்க ஒரு ஸ்பின்னரே கிடையாது.. இந்தியாவின் பேலன்ஸை தாங்காத அவங்கள மாத்துங்க.. சேப்பல் அட்வைஸ்

ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் 19 பந்துகளில் 48 ரன்கள் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி மீண்டும் ஒருமுறை அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். மறுபுறம் கேப்டன் ஆயுஷ் மாத்ரே முதல் போட்டியில் 21 ரன்கள் மட்டுமே அடித்த வேளையில் இரண்டாவது போட்டியில் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement