பாக்ஸிங் டே டெஸ்ட் என்றால் என்ன? அதில் இந்தியாவின் செயல்பாடுகள் எப்படி? விவரம் இதோ

Boxing Day Test
- Advertisement -

தென்னாபிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 26ஆம் தேதி சென்சூரியன் நகரில் துவங்குகிறது. இத்தொடரில் சிறப்பாக விளையாடி தென்னாபிரிக்க மண்ணில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைக்கும் முனைப்புடன் களமிறங்கும் இந்திய அணிக்கு பாக்ஸிங் டே நாளில் அசத்தப்போவது யார் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

அதாவது ஒவ்வொரு வருடமும் கிறிஸ்மஸ் தினத்தின் அடுத்த நாள் துவங்கும் டெஸ்ட் போட்டிகள் பாக்ஸிங் டே போட்டி என்றழைக்கப்படுவது வழக்கமாகும். சொல்லப்போனால் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தான் முதல் முறையாக இந்த பெயரில் டெஸ்ட் போட்டிகள் நடைபெறத் துவங்கியது. அது ரசிகர்களிடம் புகழ்பெற்றதால் நாளடைவில் கிறிஸ்மஸ் தினத்தின் அடுத்த நாள் உலகில் நடைபெறும் அனைத்து டெஸ்ட் போட்டிகளும் பாக்ஸிங் டே போட்டி என்றுழைக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

பின்னணி என்ன:
1880களில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் உள்ளூர் அணிகளுக்கிடையே விளையாடப்பட்ட இந்த போட்டிகள் நாளடைவில் மிகவும் பிரபலமாகின. குறிப்பாக கிறிஸ்மஸ் தினத்தின் அடுத்த நாளில் விடுமுறையாக இருக்கும் என்பதால் அன்று குடும்பங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பெட்டிகளில் பரிசு பொருட்களை வைத்து கொடுத்து விட்டு டெஸ்ட் போட்டிகளை பார்க்க வருவார்கள். அதனால் அன்றைய நாள் ஆங்கிலத்தில் “பாக்ஸிங் டே” என்றழைக்கப்பட துவங்கியது.

இம்முறை இதே நாளில் தென்னாப்பிரிக்கா – இந்தியா அணிகள் மோதுவதைப் போல ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் மெல்போர்னில் 2வது டெஸ்ட் போட்டியில் மோதுகின்றன. இந்நிலையில் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் செயல்பாடுகளை பற்றி பார்ப்போம். வரலாற்றில் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகளில் இதுவரை இந்தியா 17 முறை விளையாடியுள்ளது.

- Advertisement -

அதில் 4 வெற்றிகளையும் 10 தோல்விகளையும் பதிவு செய்துள்ள இந்தியா 3 போட்டிகளை டிராவில் முடித்துள்ளது. குறிப்பாக 2018, 2020இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தலா 2 முறை 2021இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 1 முறை என கடைசியாக விளையாடிய 3 பாக்ஸிங் டே போட்டிகளில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக இதே செஞ்சூரியன் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2021இல் கடைசியாக விளையாடிய பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

இதையும் படிங்க: அஷ்வினை வெச்சுகிட்டு ஜெயிக்க முடியாது.. முதல் போட்டிக்கான தனது இந்திய பிளேயிங் லெவனை வெளியிட்ட மஞ்ரேக்கர்

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த டாப் இந்திய வீரர்கள்:
1. வீரேந்திர சேவாக் : 195, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2003
2. விராட் கோலி : 169, ஆஸ்திரேலியாவுக்கு, 2014
3. அஜிங்கி ராஹானே : 147, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2014
சிறந்த பலிங்கை பதிவு செய்துள்ள டாப் 3 பவுலர்களின் பட்டியல்:
1. ஜஸ்ப்ரித் பும்ரா : 6/33, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2018
2. ரவீந்திர ஜடேஜா : 6/138, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, 2013
3. அனில் கும்ப்ளே : 6/176, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2003

Advertisement