அஷ்வினை வெச்சுகிட்டு ஜெயிக்க முடியாது.. முதல் போட்டிக்கான தனது இந்திய பிளேயிங் லெவனை வெளியிட்ட மஞ்ரேக்கர்

Sanjay Manjrekar 8.jpeg
- Advertisement -

ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி சென்சூரியன் நகரில் துவங்குகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ள இத்தொடரில் 1992 முதல் இதுவரை சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்தி தென்னாபிரிக்க மண்ணில் முதல் முறையாக இந்தியா வெல்லுமா என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

அதற்கு வேகத்துக்கு சாதகமான மைதானங்களை கொண்ட தென்னாப்பிரிக்காவில் தரமான பிளேயிங் லெவனை களமிறக்குவது அவசியமாகிறது. குறிப்பாக எக்ஸ்ட்ரா வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றை இயற்கையாக கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்காவில் வெற்றி பெறுவதற்கு 4 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழல் பந்து வீச்சாளரை கொண்ட கூட்டணியுடன் களமிறங்குவதே மிகவும் பிரபலமான டெம்ப்ளேட்டாக இருக்கிறது.

- Advertisement -

அஸ்வின் வேண்டாம்:
அதன் அடிப்படையில் பார்க்கும் போது ரவிச்சந்திரன் அஸ்வினை விட பேட்டிங்கில் சற்று அதிகமாக அசத்தக்கூடிய ரவீந்திர ஜடேஜா முதல் போட்டியில் விளையாடுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது என்று சொல்லலாம். சொல்லப்போனால் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் மனசாட்சியின்றி அஸ்வினை பெஞ்சில் அமர வைத்த இந்திய அணி நிர்வாகம் இப்போதும் அதையே செய்யும் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் அஸ்வினை வைத்து வெல்வது கடினம் என்பதால் ரவீந்திர ஜடேஜாவை தேர்ந்தெடுக்கலாம் என்று சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். முதல் போட்டிக்கான தம்முடைய இந்திய பிளேயிங் லெவனை தேர்ந்தெடுத்த அவர் இது பற்றி இஎஸ்பிஎன்கிரிக்இன்போ இணையத்தில் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை பிட்ச் தாறுமாறாக சுழன்றால் இந்தியா 2 ஸ்பின்னர்களுடன் களமிறங்கலாம்

- Advertisement -

“ஆனால் இது சுழலுக்கு சாதகமான மைதானம் கிடையாது. எனவே நான் ரவீந்திர ஜடேஜாவை 7வது இடத்தில் தேர்வு செய்கிறேன். குறிப்பாக வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் துறையில் முக்கிய பங்காற்றக்கூடிய திறமையை கொண்டுள்ள அவரை 7வது இடத்தில் ஒரே ஒரு ஸ்பின்னராக ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக தேர்வு செய்கிறேன். மேலும் தொடரின் முதல் போட்டியிலேயே லோயர் ஆர்டரில் உங்களுக்கு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் இருப்பது நல்ல வசதியை கொடுக்கும்”

இதையும் படிங்க: இப்போவும் கேரண்டியா சொல்ல முடியாது.. கொல்கத்தா வயிற்றில் புளியை கரைக்கும் பேட்டியை கொடுத்த ஸ்டார்க்

“இந்த நேரத்தில் கடந்த தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் சர்துள் தாக்கூர் 7 விக்கெட்டுகள் எடுத்ததை மறந்து விடாதீர்கள்” என்று கூறினார். முதல் டெஸ்ட் போட்டிக்கான சஞ்சய் மஞ்ரேக்கரின் இந்திய பிளேயிங் லெவன் இதோ: ரோஹித் சர்மா (கேப்டன்), யசஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் கே.எல். ராகுல் (கீப்பர்) ரவீந்திர ஜடேஜா, சர்துள் தாகூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகேஷ் குமார்

Advertisement