இப்போவும் கேரண்டியா சொல்ல முடியாது.. கொல்கத்தா வயிற்றில் புளியை கரைக்கும் பேட்டியை கொடுத்த ஸ்டார்க்

Mitchell Starc KKR 2
- Advertisement -

மிகவும் விறுவிறுப்பாக துபாயில் நடைபெற்ற ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலக கோப்பையை கேப்டனாக வென்ற ஆஸ்திரேலியாவின் பட் கமின்ஸ் 20.5 கோடிக்கு ஹைதராபாத் அணிக்காக வாங்கப்பட்டார். அடுத்த ஒரு மணி நேரத்தில் அவரையும் மிஞ்சிய மற்றொரு வீரர் மிட்சேல் ஸ்டார்க் 24.75 கோடிகளுக்கு கொல்கத்தா அணிக்காக வாங்கப்பட்டது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றின் ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்தார். இருப்பினும் விராட் கோலி, எம்எஸ் தோனி, ரோகித் சர்மா போன்ற இந்திய ஜாம்பவான்கள் 16 கோடிக்கும் குறைவான தொகைக்கு விளையாடி வரும் நிலையில் சமீப காலங்களில் நாட்டுக்காக ஐபிஎல் தொடரை புறக்கணித்த அவருக்கு இவ்வளவு கோடிகள் கொடுக்கப்பட்டது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

வேலையை காட்டும் ஸ்டார்க்:
இருப்பினும் தம்முடைய திறமை மற்றும் தரத்தால் இவ்வளவு பெரிய கோடிகளை அள்ளிய ஸ்டார்க் 2024 சீசனிலாவது முழுமையாக விளையாடுவார் என்று நம்பப்படுகிறது. ஆனால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் இப்போதும் நாட்டுக்காக விளையாடுவதே தம்முடைய முதல் இலக்கு என்று மிட்சேல் ஸ்டார்க் கூறியுள்ளார்.

குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதே தம்முடைய மிகப்பெரிய லட்சியம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிக்கையில் பேசியது பின்வருமாறு. “நான் எப்போதுமே சர்வதேச மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். கிரிக்கெட்டிலிருந்து விலகி என்னுடைய மனைவி அலிசா அல்லது குடும்பத்தினருடன் தேவையான நேரத்தையும் நான் செலவிடுவேன்”

- Advertisement -

“அதன் வாயிலாக உடலை ரீசார்ஜ் செய்து கொண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்காக விளையாட தயாராக இருப்பேன். இப்போதும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதே என்னுடைய முதன்மை முக்கியத்துவமாகும். அதில் எதுவரை விளையாட முடியும் என்பதை என்னுடைய உடல் சொல்லும். இதற்கு முன் நான் சொன்னது போல இந்த வருடம் கிடைக்கும் பணம் நன்றாக இருக்கும்”

இதையும் படிங்க: ரொம்ப உருட்டாதீங்க.. அது ஒன்னும் இம்பாசிபிள் கிடையாது.. தெ.ஆ அணிக்கு ராகுல் டிராவிட் பதிலடி

“ஆனால் நான் எப்போதும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளித்து வருகிறேன். அது என்னுடைய ஆட்டத்திற்கு உதவியது என்று நினைக்கிறேன்” என கூறினார். அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் ஸ்டார்க் பேசியுள்ளது கொல்கத்தா அணியின் வயிற்றில் புளியை கரைப்பது போல் அமைந்துள்ளது என்றே சொல்லலாம். ஏனெனில் அவரைப் போன்ற வீரர்கள் காயம் அல்லது பணிச்சுமை என்பதை காரணமாக சொல்லி கடந்த காலங்களில் ஐபிஎல் தொடரின் பாதியிலேயே வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement