அவருக்கு பவுலிங் போடுறது சச்சினுக்கு வீசுற மாதிரி இருக்கும் – இளம் இந்திய வீரரை ஓப்பனாக பாராட்டிய வாசிம் அக்ரம்

Wasim-Akram
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரும் ஜூன் 7 முதல் 11 வரை இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டியில் வென்று சரித்திரம் படைக்க ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போட்டியில் பட் கமின்ஸ், ஹேசல்வுட், மிட்சேல் ஸ்டார்க் போன்ற தரமான ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு விராட் கோலி, புஜாரா போன்றவர்கள் சவாலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ரோகித் சர்மா உள்ளிட்ட இதர இந்திய பேட்ஸ்மேன்களை விட தற்போது உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் இளம் வீரர் சுப்மன் கில் இந்தியாவின் வெற்றிக்காக சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு பெரிய சவாலாக இருப்பார் என்று நம்பப்படுகிறது.

Shubman-Gill

- Advertisement -

ஏனெனில் அண்டர்-19 அளவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்துள்ள அவர் தற்போது இந்தியாவின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக போற்றும் அளவுக்கு அசத்தி வருகிறார். குறிப்பாக 2018 அண்டர்-19 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் தொடர் நாயகன் விருது வென்று 2019 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக அசத்தலாக செயல்பட்டு வளர்ந்து வரும் வீரர் விருதையும் வென்ற அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 2021இல் ஆஸ்திரேலிய மண்ணில் பதிவு செய்த காபா வெற்றியில் 91 ரன்கள் அடித்து அசத்தினார்.

சச்சின் மாதிரி:
அதை தொடர்ந்து 2022 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு முதல் வருடத்திலேயே குஜராத் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்து வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே நாடுகளில் நடைபெற்ற அடுத்தடுத்த ஒருநாள் தொடர்களில் அடுத்தடுத்த தொடர் நாயகன் விருதுகளை வென்று இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். அதே வேகத்தில் சமீபத்தில் வங்கதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக 3 வகையான கிரிக்கெட்டிலும் சதமடித்த அவர் 2023 ஐபிஎல் தொடரில் 890 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்று குஜராத் ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

SHubman Gill Sachin Tendulkar

அப்படி அனைத்து வகையான போட்டிகளிலும் அனைத்து வகையான சூழ்நிலைகளிலும் அசத்தி தொடர்ந்து பெரிய ரன்களை குவிக்கும் திறமையை கொண்டிருக்கும் அவர் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரது வரிசையில் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டாராக வருவார் என்று நிறைய கருத்துக்கள் காணப்படுகிறது. இந்நிலையில் தாம் இப்போது விளையாடினால் சுப்மன் கில்லுக்கு எதிராக பந்து வீசுவது சச்சினுக்கு எதிராக வீசுவதைப் போல் இருக்கும் என முன்னாள் பாகிஸ்தான் ஜாம்பவான் வீரர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இப்போது டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில் போன்ற ஒருவருக்கு எதிராக நான் பந்து வீசுவது ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் 10 ஓவர்களில் சச்சின் டெண்டுல்கருக்கு எதிராக பந்து வீசுவதைப் போல இருக்கும். அதாவது பவர் பிளே ஓவர்களில் உள்வட்டத்திற்கு வெளியே 2 ஃபீல்டர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அந்த சூழ்நிலையில் ஜெயசூர்யா அல்லது கழுவித்ரனா ஆகியோருக்கு எதிராக நான் பந்து வீசினாலும் அவர்கள் என்னை ஒவ்வொரு பந்திலும் அடிக்க முயற்சிப்பார்கள் என்பதால் அவர்களை அவுட்டாக்க முடியும் என்பது எனக்கு தெரியும்”

“ஆனால் சச்சின், கில் போன்ற வீரர்கள் அதிரடியாக அல்லாமல் நேர்த்தியான ஷாட்களை விளையாடக் கூடியவர்கள். இவர்களைப் போன்ற வீரர்கள் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து பெரிய ரன்களை அடிப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். அந்த வகையில் அவர் உலக கிரிக்கெட்டின் வருங்கால சூப்பர் ஸ்டார்” என கூறினார்.

இதையும் படிங்க:தோனியின் அருகில் இருக்கும் இந்த புதிய பினிஷர் யார்? இவருக்காக அவரது தாய் செய்த தியாகம் என்ன? – நெகிழவைக்கும் தகவல்

இது போல நிறைய முன்னாள் வீரர்கள் தொடர்ந்து சுப்மன் கில்லை பாராட்டி வருகின்றனர். சொல்லப்போனால் தமக்கு அடுத்தபடியாக அவர் தான் இந்திய கிரிக்கெட்டின் வருங்காலம் என்று விராட் கோலியே சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement