தோனியின் அருகில் இருக்கும் இந்த புதிய பினிஷர் யார்? இவருக்காக அவரது தாய் செய்த தியாகம் என்ன? – நெகிழவைக்கும் தகவல்

Dhruv-Jurel-2
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது 16-வது சீசனை நிறைவு செய்துள்ளது. ஆரம்ப காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் படிப்படியாக வரவேற்பினை பெற்ற இந்த ஐபிஎல் தொடரானது தற்போது உலக கிரிக்கெட்டையே ஆட்சி செய்யும் அளவிற்கு அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட உலகெங்கிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான வீரர்கள் போட்டி போட்டு வருகின்றனர். ஐபிஎல் தொடரில் இடம் பெற்று விட்டாலே இளம் வீரர்களின் வாழ்க்கை முற்றிலுமாக மாறும் ஒரு தளமாக இந்த ஐபிஎல் தொடரானது இருந்து வருகிறது.

IPL-2023

- Advertisement -

ஏனெனில் ஏழ்மையால் வாடி இருந்த பல இளம் வீரர்கள் இந்த ஐபிஎல் தொடரின் மூலம் லட்சாதிபதியாகவும், கோடீஸ்வரர்களாகவும் மாறி வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஏழ்மையின் அடிமட்டத்திலிருந்து உழைத்து தற்போது ஒரு நல்ல இடத்தை எட்டியுள்ள ஒரு வீரரை பற்றி தான் இந்த தொகுப்பில் காண உள்ளோம். அதன்படி 22 வயதான ராஜஸ்தான் அணியின் புதிய பினிஷராக அவதரித்திருக்கும் துருவ் ஜூரேல் பற்றி தான் இந்த தொகுப்பில் நாம் காண உள்ளோம்.

அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் பிறந்த இவர் ஒரு காலத்தில் வீட்டை விட்டு ஓடி விடலாம் என்றெல்லாம் யோசித்து இருக்கிறாராம். அந்த அளவிற்கு அவரது குடும்பத்தில் ஏழ்மை நிலவியிருக்கிறது. துருவ் ஜூரேலின் தந்தை கார்கில் போரில் பணிபுரிந்தவர். அதன் பிறகு வேலையில்லாமல் இருந்து வருகிறார். அவரது தாய் தான் அவரது குடும்பத்தை காப்பாற்றியுள்ளார். ஒரு கட்டத்தில் குடும்ப வருமானம் முற்றிலும் இல்லாத காரணத்தினால் அவரை படித்து குடும்பத்தை காப்பாற்றும்படி பெற்றோர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர்.

Dhruv Jurel 1

ஆனால் துருவ் ஜூரேல் எனக்கு கிரிக்கெட் தான் முக்கியம் இல்லையெனில் நான் வீட்டை விட்டு சென்று விடுவேன் என்றெல்லாம் கூறியிருந்திருக்கிறார். அப்போது துருவ் ஜூரேலின் தாய் தன்னுடைய கழுத்தில் இருந்த தங்கச் செயினை விற்று அவருக்கு தேவையான கிரிக்கெட் உபகரணங்களை வாங்கி கொடுத்துள்ளார். அதன் பின்னர் தனது கடினமான உழைப்பினால் படிப்படியாக முன்னேற்றத்தை பெற்ற அவர் இந்தியாவிற்காக அண்டர் 19 மற்றும் இந்திய ஏ அணியிலும் இடம் பிடித்து விளையாடினார்.

- Advertisement -

இருப்பினும் அவர் எதிர்பார்த்த போல் ஜெய்ஸ்வால், ரவி பிஷ்னாய் போன்று பெரியதாக சாதிக்க முடியவில்லை என்பதால் அவரது சொந்தக்காரர்களும் அவரை அவமானப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் உன்னோடு விளையாடிய வீரர்கள் எல்லாம் தற்போது பெரிய அளவிற்கு சென்று விட்டார்கள். நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்றெல்லாம் கிண்டல் செய்து இருக்கிறார்கள்.

Dhruv Jurel

இவற்றையெல்லாம் பொருட்படுத்தாத துருவ் ஜூரேல் தனது திறனின் மீது நம்பிக்கை வைத்து கடினமாக உழைக்க தொடங்கினார். அந்த உழைப்பிற்கு கிடைத்த பலனாக கடந்த 2022-ஆம் ஆண்டு 20 லட்சம் ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்திருந்தது. அதனைதொடர்ந்து தொடர்ச்சியான விடாமுயற்சியின் மூலம் பயிற்சி போட்டிகளில் ராஜஸ்தான் அணி நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்திருந்தார். ஆனாலும் அவருக்கு கடந்த ஆண்டு ஒரு போட்டியில் கூட விளையாட கிடைக்கவில்லை.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆண்டு இம்பேக்ட் விதிமுறை மூலமாக கூடுதலாக ஒரு பிளேயர் விளையாடலாம் என்ற வசதி ஏற்பட்டதும் ஆர்.சி.பி. அணிக்கு எதிராக பின்வரிசையில் களமிறங்கி 16 பந்துகளில் 34 ரன்கள் குவித்தார். அதேபோன்று சென்னைக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் 15 பந்துகளில் 34 ரன்கள் குவித்தார். இப்படி துருவ் ஜூரேலின் அசத்தலான அதிரடி ஆட்டம் ராஜஸ்தான அணிக்கு நம்பிக்கையை தர நிச்சயம் அடுத்த ஆண்டு நிச்சயம் அவர் அடுத்த கட்டத்திற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : WTC Final : ஆண்டர்சன், ப்ராட் வழியை ஃபாலோ பண்ணி விராட் கோலிய முடிங்க – ஆஸ்திரேலிய அணிக்கு முன்னாள் ஆஸி வீரர் அட்வைஸ்

மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்து வந்த அவர் தற்போது ராஜஸ்தான் அணிக்கு புதிய பினிஷராகவும் உருவெடுத்திருக்கிறார். அதோடு இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் விளையாடும் போது மைதானத்திற்கு வந்த அவரது தந்தையும், தாயும் அவரது ஆட்டத்தை பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டு இருக்கின்றனர். அப்போது மைதானத்தில் இருந்த துருவ் ஜூரேலின் தந்தை உன்னுடைய தங்கச்செயின் தான் இன்று மைதானத்தில் ஜொலிக்கிறது என தனது மகனின் முன்னேற்றத்தை பார்த்து மனைவியிடமும் பெருமைப்பட பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement