WTC Final : ஆண்டர்சன், ப்ராட் வழியை ஃபாலோ பண்ணி விராட் கோலிய முடிங்க – ஆஸ்திரேலிய அணிக்கு முன்னாள் ஆஸி வீரர் அட்வைஸ்

Anderson-3
- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டின் 2வது சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி வரும் ஜூன் 7 முதல் 11 வரை இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. அதில் லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியா 2வது இடம் பிடித்த இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் இந்தியாவை தோற்கடித்து 5 உலகக்கோப்பை மற்றும் டி20 உலக கோப்பையை வென்றது போல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையையும் வெல்ல ஆஸ்திரேலியா முயற்சிக்கவுள்ளது.

Virat Kohli 75

- Advertisement -

மறுபுறம் கடந்த ஃபைனலில் நியூசிலாந்திடம் சந்தித்த தோல்வியிலிருந்து பாடத்தை கற்ற இந்தியா இம்முறை கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்த போராட உள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலி சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகிறது. சொல்லப்போனால் கடந்த ஃபைனலில் சுமாரான ஃபார்மில் தவித்ததால் தடுமாறிய அவர் தற்போது 3 வகையான கிரிக்கெட்டிலும் சதங்களை விளாசி ஐபிஎல் 2023 தொடரிலும் 2 சதங்களை அடித்து முழுமையான பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.

ஆண்டர்சன், ப்ராட் வழி:
அதனால் வரலாற்றில் இதற்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணிலேயே மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ள அவர் இந்த ஃபைனலிலும் சவாலை கொடுத்து இந்தியாவின் வெற்றிக்கு போராடுவார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். முன்னதாக விராட் கோலியின் கேரியரிலேயே கடந்த 2014 இங்கிலாந்து சுற்றுப்பயணம் மறக்க முடியாத மோசமானதாக அமைந்தது. ஏனெனில் அந்த சுற்றுப்பயணத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் ப்ராட் ஆகியோரிடம் பெட்டிப் பாம்பாக அடங்கி 1, 8, 25, 0, 39, 28, 0, 7, 6, 20 என 5 போட்டிகளில் சொற்ப ரன்களில் அவுட்டான அவர் வெறும் 13.50 என்ற மோசமான சராசரியில் பேட்டிங் செய்து விமர்சனங்களை சந்தித்தார்.

anderson 1

இருப்பினும் 2018 சுற்றுப்பயணத்தில் அதே ஆண்டர்சன், ப்ராட்க்கு சிம்ம சொப்பனமாக மாறிய அவர் 692 ரன்களை எடுத்து தன்னை சாம்பியன் வீரர் என்பதை நிரூபித்தார். இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெறும் இந்த போட்டியில் 2014இல் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் வீசிய லைன், லென்த்துகளை பின்பற்றி தரமான விராட் கோலியை முன்கூட்டிய சாய்க்குமாறு ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு முன்னாள் வீரர் கிரேக் சேப்பல் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“2014 மற்றும் 2021 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் விராட் கோலியை ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டுவர்ட் ப்ராட் உள்ளிட்ட இங்கிலாந்து பவுலர்கள் நிறைய கேள்வி கேட்டனர். அவர்கள் தங்களுக்கு பொருந்தக்கூடிய கால சூழ்நிலைகளில் அவருக்கு எதிராக துல்லியமான லைன் மற்றும் லென்த்தை பின்பற்றி பந்து வீசினார்கள். ஏனெனில் சிறப்பான அவருக்கு சரியாகப் பந்து வீச வேண்டும் என்பதை அவர்கள் அறிவார்கள். அதே போல ஆஸ்திரேலியர்களும் முதல் பந்திலிருந்தே அவருக்கு எதிராக துல்லியமாக வீசுவார்கள் என்று சொல்ல முடியாது என்றாலும் முடிந்தளவுக்கு முயற்சிக்க வேண்டும்”

Greg-Chappell

“ஏனெனில் இங்கிலாந்தின் கால சூழ்நிலைகளை இங்கிலாந்தினரை தவிர்த்து உலகில் வேறு யாரும் சரியாக அறிய முடியாது. பொதுவாக ஆஸ்திரேலியர்களுக்கு எதிராக பேட்டிங் செய்ய விராட் கோலி மிகவும் விரும்புவார். அதை நாம் ஆஸ்திரேலியாவில் பார்த்துள்ளோம். அங்கு அவருடைய சாதனை புள்ளி விவரங்கள் தான் அதற்கு சாட்சியாகும். அந்த நிலையில் என்னுடைய அனுபவத்தில் இப்போட்டி நடைபெறும் ஓவல் மைதானத்தில் இருக்கக்கூடிய பவுன்ஸ் விராட் கோலிக்கு மிகவும் பொருந்தும்”

இதையும் படிங்க:சர்வதேச வீரர்களிடையே தேசப்பற்று குறைய அவங்க தான் காரணம், இந்தியாவை தாக்கிய ஆஸி கேப்டன் – காரணம் என்ன?

“குறிப்பாக வறண்ட வானிலை நிலவினால் ஓவல் மைதானம் இங்கிலாந்தில் இருக்கும் ஆஸ்திரேலிய மைதானத்தை போன்ற உணர்வை கொடுக்கும். அது விராட் கோலிக்கு கச்சிதமாக பொருந்தும். எனவே மனதளவில் அதற்கு தயாராக இருந்தால் அவர் நிச்சயமாக இந்தியாவுக்கு பெரிய ரன்களை எடுப்பார். ஏனெனில் நல்ல வீரரான அவர் வெற்றியில் வித்தியாசத்தை ஏற்படுத்தக் கூடிய ஒருவர் என்று நீங்கள் சொல்லலாம்” என கூறினார்.

Advertisement