- Advertisement -
இந்திய கிரிக்கெட்

50 ஓவரில் 574 ரன்ஸ்.. தமிழ்நாடு அணியின் உலக சாதனையை உடைத்த பீகார்.. சூர்யவன்சி அதிரடியில் புதிய சாதனை

இந்தியாவில் 2025 விஜய் ஹசாரே கோப்பை உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 24ஆம் தேதி துவங்கியது. அந்தத் தொடரில் பிளேட் பிரிவில் இடம் வகிக்கும் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் பீகார் அணிகள் மோதிய போட்டி ராஞ்சியில் துவங்கியது. காலை 9 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பீகார் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய பீகார் அணிக்கு 14 வயதாகும் நம்பிக்கை நட்சத்திரம் வைபவ் சூரியவன்சி ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடினார். அவருடன் இணைந்து விளையாடிய மங்கள் மஹ்ரோர் 158 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து 33 ரன்களை குவித்து அவுட்டானார். அடுத்து வந்த பியூஸ் சிங் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

சூர்யவன்சி அதிரடியில்:

இந்தப் பக்கம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சூரியவன்சி 36 பந்துகளில் 100 ரன்கள் அடித்தார். அதன் வாயிலாக லிஸ்ட் ஏ ஒருநாள் கிரிக்கெட்டில் இளம் வயதில் சதமடித்த வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் 59 பந்துகளில் 150 ரன்கள் கடந்தார்.

அதன் வாயிலாக லிஸ்ட் ஏ ஒருநாள் கிரிக்கெட்டில் வேகமாக 150 ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் சூர்யவன்சி படைத்துள்ளார். இதற்கு முன் 2015ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக தென் ஆப்பிரிக்கா ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் 64 பந்துகளில் 150 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனை. அந்த சாதனையை உடைத்த சூரியவன்சி இரட்டை சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 16 பவுண்டரி 15 சிக்ஸருடன் 190 (84) ரன்களை விளாசி அவுட்டானார்.

- Advertisement -

பீகார் உலக சாதனை:

அவருடன் இணைந்து விளையாடிய பியூஸ் சிங் அரை சதமடித்து 77 (66) ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். மிடில் ஆர்டரில் அருணாச்சலப் பிரதேச பவுலர்களை அடித்து நொறுக்கிய கேப்டன் சகிபுல் கானி சதமடித்தார். அவருடன் இணைந்து விளையாடிய ஆயுஷ் லோகருகா தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடி 11 பவுண்டரி 8 சிக்ஸருடன் 116 (56) ரன்கள் விளாசி அவுட்டானார்.

இதையும் படிங்க: டி20 வேர்ல்டுகப் டீம்ல இருந்து தூக்குனாலும் மறுபடியும் சுப்மன் கில்லுக்கு அந்த பதவி கிடைக்கும் – வெளியான தகவல்

இறுதியில் கேப்டன் கானி 10 பவுண்டரி 12 சிக்ஸருடன் 128* (40) ரன்கள் அடித்த உதவியுடன் 50 ஓவரில் பீகார் 574/6 ரன்களை குவித்தது. இதன் வாயிலாக ஒரு லிஸ்ட் ஏ போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த அணி என்ற உலக சாதனையை பீகார் படைத்துள்ளது. இதற்கு முன் 2022/23 விஜய் ஹசாரே கோப்பையில் இதே அருணாச்சலப் பிரதேசத்துக்கு எதிராக தமிழ்நாடு அணி 506/2 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.

- Advertisement -