டி20 வேர்ல்டுகப் டீம்ல இருந்து தூக்குனாலும் மறுபடியும் சுப்மன் கில்லுக்கு அந்த பதவி கிடைக்கும் – வெளியான தகவல்

Shubman Gill
- Advertisement -

அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கும் 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அண்மையில் பி.சி.சி.ஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் துணை கேப்டன் சுப்மன் கில் நீக்கப்பட்டது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனெனில் ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக டி20 போட்டிகளில் துணை கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

கேப்டனாக கம்பேக் கொடுக்க காத்திருக்கும் சுப்மன் கில் :

அதனால் அவர் நிச்சயம் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் டி20 உலக கோப்பை தொடரிலும் துணை கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ச்சியான பேட்டிங் ஃபார்ம் சொதப்பல் காரணமாக சுப்மன் கில் நீக்கப்பட்டு அபிஷேக் சர்மாவுடன் துவக்க வீரராக சஞ்சு சம்சனை களமிறக்க பிசிசிஐ முடிவு செய்தது.

- Advertisement -

இதன் காரணமாக சுப்மன் கில் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இப்படி துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட ஒருவர் திடீரென டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக கழட்டி விடப்பட்டது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இருந்தாலும் அணியின் பலமான காம்பினேஷன் காரணமாக அவரை வெளியேற்றியுள்ளதாக இந்திய அணியின் நிர்வாகமும் உறுதியான தகவல்களை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடருக்கான அணியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டாலும் நிச்சயம் டி20 இந்திய அணியின் கேப்டனாக அவர் கம்பேக் கொடுப்பார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் தொடருக்கு பின்னர் சூரியகுமார் யாதவ் இந்திய டி20 கேப்டன் பதிவிலிருந்து நீக்கப்படுவார் என்றும் அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக சுப்மன் கில் பொறுப்பேற்பார் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : சுப்மன் கில் டிராப் ஆனதுக்கு காரணமே சூரியகுமார் யாதவ் தான் – ராபின் உத்தப்பா கருத்து

பின்னர் மூன்று வகையான இந்திய அணிக்கும் அவரே கேப்டனாக இருப்பார் என்றும் கூறப்படுகிறது. இது குறித்தான முடிவுகளை அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாகவே நிர்வாகம் எடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement