எதிர்வரும் 2026 டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் பி.சி.சி.ஐ-யின் மூலம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் சூரியகுமார் யாதவ் தலைமையில் 15 வீரர்கள் இடம் பிடித்திருந்தனர். இந்த டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் துணை கேப்டன் சுப்மன் கில் அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அக்சர் படேல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுப்மன் கில் நீக்கப்பட சூரியகுமார் யாதவ் தான் காரணம் : ராபின் உத்தப்பா
இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டனாக பார்க்கப்பட்ட சுப்மன் கில் இப்படி திடீரென அணியில் இருந்து கழ்ட்டி விடப்பட அவரது மோசமான பேட்டிங் பார்ம் தான் காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் டி20 போட்டிகளை பொறுத்தவரை கடந்த 20 ஆட்டங்களாக சுப்மன் கில் இதுவரை ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அதோடு ரன் குவிக்கவும் தடுமாறி வருகிறார்.
அதன் காரணமாகவே அவர் டி20 உலககோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக சுப்மன் கில் நீக்கப்பட்டு குறித்தே பலரும் பேசி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பாவும் தற்போது சுப்மன் கில் நீக்கப்பட்டது குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அந்தவகையில் அவர் கூறியதாவது : டி20 உலககோப்பை அணியில் இருந்து சுப்மன் கில் நீக்கப்பட காரணமே சூரியகுமார் யாதவ் தான். ஏனெனில் உலககோப்பை அணியில் ஒரு வீரர் பார்மில் இல்லாமல் இருந்தால் அவரை வைத்து விளையாடலாம். ஆனால் ஒன்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் பார்மில் இல்லாதபோது அழைத்து செல்வது தவறு.
ஏற்கனவே சூரியகுமார் யாதவின் பேட்டில் இருந்து ரன்கள் வரவில்லை. இவ்வேளையில் கில்லும் நல்ல டச்சில் இல்லை. எனவே தான் கேப்டனான சூரியகுமார் யாதவை நீக்காமல் துணை கேப்டனான சுப்மன் கில்லை நீக்கியுள்ளனர். சுப்மன் கில் தரமான பிளேயர் தான் அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் தற்போதைக்கு அவர் நல்ல டச்சில் இல்லை.
இதையும் படிங்க : ப்ளான் இல்லாம கில்லை வெச்சு நேரத்தை வீணடிச்சதுக்கு.. அவங்கள வளத்துருக்கலாம்.. அகர்கரை சாடிய கைஃப்
தற்போதைக்கு டி20 அணியின் காம்பினேஷன் பொறுத்த வரை சுப்மன் கில் நீக்கப்பட்டு அவரது துவக்க வீரருக்கான இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் விளையாட இருப்பது சரியான முடிவு தான் என்றும் ராபின் உத்தப்பா கூறியது குறிப்பிடத்தக்கது.



