புதிய பந்தில் என்னை யாரும் தொட முடியாது, பும்ராவை முந்தி 2 வரலாற்று சாதனை படைத்த புவி – உலக சாதனை

Rohit Sharma Bhuvneswar Kumar
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் விளையாடி வரும் இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை விராட் கோலியின் அபார ஆட்டத்தால் தோற்கடித்து கடந்த வருடம் துபாயில் சந்தித்த வரலாற்றுத் தோல்விக்கு பழி தீர்த்தது. அந்த புத்துணர்ச்சியுடன் அக்டோபர் 27ஆம் தேதியன்று தன்னுடைய 2வது போட்டியில் கத்துக்குட்டி நெதர்லாந்தை எதிர்கொண்ட இந்தியா 56 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்று குரூப் 2 புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. சிட்னியில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 179/2 சேர்த்தது.

IND vs NED Rohit Sharma Axar Patel KL Rahul

- Advertisement -

இந்தியாவுக்கு கேஎல் ராகுல் ஆரம்பத்திலேயே 9 (12) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினாலும் 2வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ரோகித் சர்மா 53 (39) ரன்களில் அவுட்டானார். அப்போது களமிறங்கிய சூரியகுமாருடன் கை கோர்த்த விராட் கோலி 3வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கடைசிவரை அவுட்டாகாமல் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 62* (44) ரன்கள் குவித்தார். அவரை விட மறுபுறம் அட்டகாசமாக செயல்பட்ட சூரியகுமார் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 51* (25) ரன்கள் குவித்து பினிஷிங் செய்தார்.

மிரட்டிய புவி:
அதை தொடர்ந்து 180 ரன்களை துரத்திய நெதர்லாந்து ஆரம்பம் முதலே இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் 20 ஓவரில் 123/9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. கேப்டன் எட்வர்ட்ஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக டிம் பிரிங்கள் 20 (15) ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல் மற்றும் அர்ஷிதீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர். இந்த வெற்றிக்கு சூரியகுமார் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்ட நிலையில் பந்து வீச்சு துறையில் இதர பவுலர்களை காட்டிலும் அற்புதமாக செயல்பட்ட சீனியர் பவுலர் புவனேஸ்வர் குமார் வெறும் 3.00 என்ற துல்லியமான எக்னாமியில் பந்து வீசி தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

Bhuvneshwar-Kumar-1

குறிப்பாக தன்னுடைய முதல் 2 ஓவர்களில் 1 ரன் கூட கொடுக்காமல் அடுத்தடுத்த மெய்டன் ஓவர்களாக வீசிய அவர் மொத்தமாக வீசிய 3 ஓவரில் வெறும் 9 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து மிரட்டினார். அறிமுகமானது முதல் இதேபோல் புதிய பந்தில் ஸ்விங் செய்து மிரட்டும் பவுலராக அறியப்படும் அவர் சமீப காலங்களில் டெத் ஓவர்களில் தடுமாறி ரன்களையும் வெற்றியும் தாரை வார்த்ததால் கடுமையான விமர்சனங்களுக்கும் கிண்டல்களுக்கும் உள்ளானார். ஆனால் எப்போதுமே புதிய பந்தில் மிரட்டும் திறமை பெற்றுள்ள அவர் நேற்றைய போட்டியில் மீண்டும் ஒருமுறை தனது ஸ்விங் பந்துகளை உலகில் யாராலும் அவ்வளவு எளிதில் தொட முடியாது என்று நிரூபித்து காட்டினார்.

- Advertisement -

அந்த வகையில் மிகச்சிறந்த ஸ்விங் பவுலராக திகழும் அவர் நேற்றைய போட்டியில் வீசிய 2 மெய்டன் ஓவர்களையும் சேர்த்து இந்த வருடம் 5 மெய்டன் ஓவர்களை வீசியுள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய பவுலர் (முழு அந்தஸ்து பெற்ற நாடுகள்) என்ற புதிய உலக சாதனையை அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. புவனேஸ்வர் குமார் : 5* (2022)
2. ஜஸ்பிரித் பும்ரா : 4 (2014)
3. ரிச்சர்ட் ங்கரவா : 4 (2021)

Bhuvaneswar Kumar IND vs ENg

2. அத்துடன் அனைத்து விதமான டி20 கிரிக்கெட்டையும் சேர்த்து அதிக மெய்டன் ஓவர்களை வீசிய இந்திய பவுலர் என்ற புதிய வரலாற்றையும் அவர் படைத்தார். அந்த பட்டியல்:
1. புவனேஸ்வர் குமார் : 20*
2. ஜஸ்பிரித் பும்ரா : 19
3. பிரவீன் குமார் : 19
4. ஹர்பஜன் சிங் : 13
5. இர்பான் பதான் : 13

இதையும் படிங்க : பாகிஸ்தானில் பிறந்து சம்பவம் செய்த ஜிம்பாப்வே நாயகன் – விராட் கோலியை முந்தி புதிய உலக சாதனை

3. மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பவர்பிளே ஓவர்களில் 1000 பந்துகளை வீசிய முதல் இந்திய பவுலர் என்ற வரலாற்றையும் அவர் படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஜஸ்ப்ரித் பும்ரா மட்டுமே அதுவும் 500+ பந்துகளை மட்டுமே வீசியுள்ளார்.

Advertisement