என்னை எடுக்காம தப்பு பண்ணிட்டீங்களே.. 6, 6.. 350 ஸ்ட்ரைக் ரேட்டில் சூப்பர் ஃபினிஷ் செய்த புவி – ரோஹித்துக்கு பதிலடி

Bhuvneswar Kumar 2
- Advertisement -

ஐசிசி 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி 2011 போல கோப்பையை வெல்வதற்காக 18 பேர் கொண்ட இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்ட அந்த அணியில் சஹால், ஷிகர் தவான், அஸ்வின் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் தேர்வு செய்யப்படாதது ஒருத்தரப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அதே போல அந்த அணியில் நட்சத்திர சீனியர் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் இடம் பெறாததும் சில ரசிகர்களுக்கு அதிருப்தியை கொடுத்தது.

கடந்த 2012இல் அறிமுகமாகி புதிய பந்தை ஸ்விங் செய்து விக்கெட்டுகளை எடுப்பதில் கில்லியாக செயல்பட்ட புவனேஸ்வர் குமார் குறுகிய காலத்திலேயே நிலையான இடம் பிடித்து 3 வகையான அணியிலும் முதன்மை பவுலராக செயல்பட்டு வந்தார். குறிப்பாக 2013 சாம்பியன்ஸ் ட்ராபி, 2015, 2019 உலகக் கோப்பை தொடர்களில் அசத்திய அவர் அதன் பின் சந்தித்த காயத்தால் தடுமாற்றமாக செயல்பட்டார். அந்த நிலைமையில் 2021, 2022 டி20 உலகக் கோப்பைகளில் தாக்கத்தை ஏற்படுத்தாத வகையில் பந்து வீசிய காரணத்தால் ஆசிய கோப்பையில் கழற்றி விடப்பட்டுள்ள அவருக்கு உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்கவில்லை.

- Advertisement -

தப்பு பண்ணிட்டீங்களே:
மறுபுறம் அவ்வப்போது விக்கெட்டுகளை எடுத்தாலும் அதிக ரன்களை வாரி வழங்கக்கூடிய சர்துள் தாக்கூரை பேட்டிங் ஆழத்தை அதிகரிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், கம்பீர் போன்ற சில முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக கத்துக்குட்டிகளுக்கு எதிராக அசத்திய தாக்கூர் ஒரு ஆல் ரவுண்டர் கிடையாது என ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் நடைபெற்று வரும் யூபி டி20 கிரிக்கெட் தொடரில் 12வது லீக் போட்டியில் கடைசி நேரத்தில் களமிறங்கிய புவனேஸ்வர் குமார் 4 பந்துகளை எதிர்கொண்டு 14 ரன்கள் அடித்து தம்முடைய நொய்டா சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 172/8 ரன்களை எடுக்க உதவினார். குறிப்பாக மீரட்டுக்கு எதிராக நொய்டா 157/7 என்ற சூழ்நிலையில் களமிறங்கிய அவர் கடைசி ஓவரின் முதல் 3 பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடித்து 14 ரன்களை 350 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி தம்முடைய பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக உலகக்கோப்பை அணி அறிவிக்கப்பட்ட நாளின் மாலையில் நடைபெற்ற அப்போட்டியில் இப்படி அசத்திய அவர் என்னை எடுக்காமல் மிஸ் செய்து விட்டீர்களே என்று ரோஹித் சர்மா அசத்தும் அளவுக்கு அசத்தினார் என்றே சொல்லலாம். ஏனெனில் இதற்கு முன் இலங்கைக்கு எதிரான ஒரு போட்டியில் கடைசி நேரத்தில் தோனியுடன் இணைந்து மிகச்சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்து தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை அவர் வெற்றி பெற வைத்ததை ரசிகர்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை.

இதையும் படிங்க: 2023 உ.கோ வாய்ப்பு போனா போகட்டும், இந்திய அணியில் இனியும் கம்பேக் கொடுக்க விரும்பல – நட்சத்திர வீரர் ஆதங்க பேட்டி

மேலும் இதே தொடரில் பந்து வீச்சிலும் சிறப்பாகவே செயல்பட்டு வரும் அவர் நிச்சயமாக சர்துள் தாக்கூரை விட பேட்டிங், பவுலிங் ஆகிய துறைகளில் அசத்தும் அளவுக்கு நல்ல திறமையும் பெரிய தொடர்களில் விளையாடிய அனுபவமும் கொண்டுள்ளார். அதனால் ரசிகர்கள் விரும்பினாலும் சிராஜ், பும்ரா போன்ற அடுத்த தலைமுறை வீரர்கள் வந்து விட்டதால் அவருக்கு வாய்ப்பு கொடுக்க அணி நிர்வாகம் யோசிப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement