ஐ.பி.எல் வரலாற்றில் முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளராக மாபெரும் சாதனையை நிகழ்த்திய – புவனேஷ்வர் குமார்

bhuvi
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 26-ஆம் தேதி துவங்கிய பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருவதால் ஒவ்வொரு போட்டியும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மும்பை டி.ஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெற்ற முக்கியமான லீக் ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின.

bhuvi 1

- Advertisement -

இந்த போட்டியில் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹைதராபாத் அணியானது பலம்வாய்ந்த பஞ்சாப் அணியின் பேட்டிங் ஆர்டரை மடக்கி 20 ஓவர்களில் வெறும் 151 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தது. இதன் காரணமாக 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணியானது 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 152 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி சார்பாக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அவர் மாபெரும் சாதனை ஒன்றிற்க்கும் சொந்தக்காரராக மாறியுள்ளார்.

bhuvi 2

அந்த வகையில் ஐபிஎல் தொடரில் கடந்த 2011-ஆம் ஆண்டு அறிமுகமான புவனேஸ்வர் குமார் தற்போது வரை 138 போட்டிகளில் விளையாடி 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

- Advertisement -

இவருக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர் பிராவோ (174) விக்கெட்டுகள், அவரைத் தொடர்ந்து இலங்கை முன்னாள் வீரர் மலிங்கா (170) விக்கெட்டுகள் எடுத்து முதல் இரண்டு இடத்தில் உள்ளனர். அவரைத் தொடர்ந்து தற்போது புவனேஸ்வர் குமார் வேகப்பந்து வீச்சாளராக 150 விக்கெட்டைடுகளை ஐ.பி.எல் தொடரில் கைப்பற்றிய மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை புவனேஷ்வர் குமார் படைத்துள்ளார்.

இதையும் படிங்க : ஐ.பி.எல் தொடரில் ரோஹித் சர்மா இப்படி மோசமாக சொதப்ப இதுதான் காரணம் – மைக்கல் வாகன் பேட்டி

அது மட்டுமின்றி இந்திய அணி சார்பாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இவருக்கு முன்னதாக அமித் மிஸ்ரா (166), பியூஸ் சாவ்லா (157), சாஹல் (151), ஹர்பஜன் (150) ஆகியோர் ஐபிஎல் தொடரில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாலும் அவர்கள் அனைவரும் ஸ்பின்னர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement