ஐ.பி.எல் தொடரில் ரோஹித் சர்மா இப்படி மோசமாக சொதப்ப இதுதான் காரணம் – மைக்கல் வாகன் பேட்டி

Vaughan
- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது இம்முறை இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் தொடரில் படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 5 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ள மும்பை அணி எப்போதுமே மிகப்பெரிய அணியாக வலம் வந்துகொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு கூட மிகப்பெரிய அணியாக பார்க்கப்பட்ட மும்பை அணி இந்த ஆண்டும் பயங்கரமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அந்த அணியில் இருந்து பல முக்கிய வீரர்கள் வெளியேறி உள்ளதால் தற்போது மும்பை அணி படாதபாடு பட்டு வருகிறது என்று கூறலாம்.

Mumbai Indians MI

- Advertisement -

ஏனெனில் இதுவரை இந்த தொடரில் விளையாடியுள்ள ஆறு ஆட்டங்களிலும் தோல்வி அடைந்துள்ள மும்பை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் பரிதவித்துக் கொண்டிருக்கிறது. அதோடு கூடுதலாக மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. ஏனெனில் இதுவரை அவர் விளையாடிய 6 போட்டிகளில் மொத்தம் 114 ரன்கள் மட்டுமே அவர் அடித்துள்ளார்.

அவரது இந்த மோசமான பேட்டிங்கும் மும்பை அணிக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணியும், மும்பை அணியின் கேப்டனான ரோகித் சர்மாவும் சொதப்புவதற்கு என்ன காரணம் என்பது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

mumbai indians

ரோகித் சர்மா நிச்சயம் தற்போது ஒரு மிகப் பெரிய பிரச்சனையில் சிக்கியுள்ளார். அதாவது இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை அவர் ஏற்றபின்பு அவர் உண்மையில் சொல்லப்போனால் சிறப்பாக விளையாடவில்லை என்றே கூறலாம். ஏனெனில் தேசிய அணியின் கேப்டனாக இருக்கும் ஒருவர் பொறுப்பை உணர்ந்து சரியாக ஆட வேண்டியது அவசியம். ஆனால் கேப்டன் பொறுப்பை அவர் பயன்படுத்த தவறிவிட்டார்.

- Advertisement -

இந்திய அணிக்கு கேப்டன்சி செய்யும் அவர் தற்போது அதிக அழுத்தம் காரணமாகவே தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் தடுமாறி வருகிறார். எப்போதுமே ஐபிஎல் தொடரில் மெதுவாக தொடங்கும் மும்பை அணியானது மீண்டும் பலமாக மாறும். ஆனால் இந்த ஆண்டு அப்படி நடக்கும் என தெரியவில்லை என்று மைக்கல் வாகன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணிக்கெதிரான போட்டியில் ஹர்டிக் பாண்டியா விளையாடாததன் காரணம் என்ன? – விவரம் இதோ

மேலும் கடந்த ஆண்டு மும்பை அணிக்காக விளையாடிய பாண்டியா சகோதரர்கள் உட்பட முக்கிய வீரர்கள் வெளியேறி உள்ளதால் தற்போது மும்பை அணி பெரிய சிக்கலை எதிர்கொண்டுள்ளதாகவும் இனி வரும் போட்டிகளில் அடுத்து வரும் சீசனுக்கான ஒருசில இளம் வீரர்களை மும்பை அணி நிச்சயம் கண்டெடுக்க இந்த சீசனை பயன்படுத்திக் கொள்ளும் என மைக்கல் வாகன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement