சி.எஸ்.கே அணிக்கெதிரான போட்டியில் ஹர்டிக் பாண்டியா விளையாடாததன் காரணம் என்ன? – விவரம் இதோ

Pandya
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 26-ஆம் தேதி துவங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது ரசிகர்களை பெருமளவு மகிழ்வித்து வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்த போட்டிகளின் அடிப்படையில் முதல் இடத்தில் இருக்கும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், 9 ஆவது இடத்தில் இருக்கும் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இன்று 29 ஆவது லீக் ஆட்டத்தில் விளையாடி வருகின்றனர்.

pandya 1

- Advertisement -

ஆனால் இந்த போட்டியில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா விலகியதன் காரணமாக ரஷித் கான் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்த போட்டிக்கு முன்னதாக சென்னை அணியின் முன்னாள் கேப்டனான தோனியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ஹர்டிக் பண்டியா அதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.

ஆனால் அடுத்த சில மணி நேரங்களிலேயே அவர் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் இருந்து விலகியது ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்வியை எழுப்பியது. இந்நிலையில் கடைசி நேரத்தில் பாண்டியா இந்த போட்டியில் இருந்து விலக என்ன காரணம் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Pandya

அதன்படி கடைசியாக ராஜஸ்தான் அணிக்கு எதிராக அற்புதமாக விளையாடிய ஹர்திக் பாண்டியா அந்த போட்டியின் போது இறுதிநேரத்தில் தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டார். எனவே இன்றைய போட்டியில் அவர் தசைபிடிப்பு காரணமாகவே விளையாட முடியாமல் வெளியில் அமர்ந்துள்ளார்.

- Advertisement -

இருப்பினும் இது பெரிய காயம் இல்லை என்றும் அடுத்த போட்டிக்கான அணியில் நிச்சயம் அவர் இடம் பிடிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த போட்டியில் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அசத்திய பாண்டியா இன்றைய போட்டியில் விளையாடாதது அந்த அணிக்கு மிகப்பெரிய இழப்பு என்றே கூறலாம்.

இதையும் படிங்க : இவரும் சாதாரண கேப்டன் தான் போல! ரோஹித் சர்மாவின் தவறை சுட்டிக்காட்டி விமர்சிக்கும் விராட் கோலியின் ரசிகர்கள்

மேலும் குஜராத் அணியில் மேத்யூ வேட் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கீப்பராக சகாவும் மற்றொரு மாற்றமாக பாண்டியாவுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப் ஆகியோரும் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement