INDvsIRE : 201 கி.மீ வேகத்தில் பந்துவீசினாரா? புவனேஷ்வர் குமார் – இணையத்தில் வைரலாகும் போட்டா (உண்மையா?)

Bhuvaneshvar-Kumar
- Advertisement -

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே நேற்று டப்ளின் நகரில் நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டியில் அயர்லாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் அட்டகாசமாக வீழ்த்திய இந்திய அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவர்களில் 108 ரன்கள் மட்டுமே அடிக்க 109 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Bhuvi 1

- Advertisement -

மொத்தம் 12 ஓவர்கள் கொண்ட போட்டி என்பதனால் இந்த போட்டியில் ஓரளவுக்கு அயர்லாந்து அணி இந்திய அணிக்கு சவால் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் எந்த ஒரு பிரச்சனையுமின்றி 9.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 111 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி எளிதாக வெற்றியை ருசித்தது.

இந்த போட்டியில் இந்திய அணியின் அதிவேகப் பந்து வீச்சாளராக பார்க்கப்படும் உம்ரான் மாலிக் அறிமுக வீரராக விளையாடியதால் அவர் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. ஏனெனில் ஐபிஎல் தொடரில் 157 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசிய அவர் சர்வதேச கிரிக்கெட்டில் தனது வேகத்தால் மிரட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Bhuvi 2

ஆனால் அனைவரும் எதிர்பார்க்காத வேளையில் டாசில் வென்று அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்த போது போட்டியின் முதல் இரண்டு பந்துகளை வீசிய புவனேஸ்வர் குமார் 201 கிலோ மீட்டர் வேகத்திலும், 208 கிலோ மீட்டர் வேகத்திலும் பந்தை வீசியதாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. தற்போது புவனேஸ்வர் குமார் வீசிய இந்த அதிவேக பந்துவீச்சுக்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

- Advertisement -

மேலும் அவர் இந்த இரண்டு பந்துகளையும் உண்மையாகவே அதிவேகமாக வீசினாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த விடயத்தில் இருக்கும் உண்மை நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி நேற்றைய போட்டி தொடங்கி முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசிய போது முதல் இரண்டு பந்துகளும் 201 கிலோமீட்டர் மற்றும் 208 கிலோ மீட்டர்கள் என்று காட்டப்பட்டது தவறான ஒன்று என்று தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க : அயர்லாந்து நாட்டின் குளிரை தாங்காமல் 3 சுவட்டர் அணிந்து விளையாடிய இந்திய வீரர் – அவரே கூறிய தகவல் இதோ

ஏனெனில் பந்துவீச்சின் வேகத்தை அளவிடும் கருவி வேலை செய்யாததால் தான் தவறாக காட்டியது என்ற தெளிவான தகவல் வெளியாகியுள்ளது. இருந்தாலும் இணையத்தில் இந்த புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் தற்போது அதனை அதிக அளவு பகிர்ந்து நகைச்சுவையாக தங்களது சில கருத்துக்களையும் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் 3 ஓவர்களை வீசிய புவனேஷ்வர் குமார் 1 மெய்டன் ஓவர் வீசியது மட்டுமின்று 16 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement