அயர்லாந்து நாட்டின் குளிரை தாங்காமல் 3 சுவட்டர் அணிந்து விளையாடிய இந்திய வீரர் – அவரே கூறிய தகவல் இதோ

Indian Team
Advertisement

இந்தியாவில் நடைபெற்று முடிந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரினை அடுத்து தற்போது ஹார்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி ஜூன் 26 ஆம் தேதி நேற்று டப்ளின் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் முற்றிலும் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி அயர்லாந்து அணியை எதிர்த்து எவ்வாறு விளையாடப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்தது.

IND vs IRE

இவ்வேளையில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹார்டிக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த முதலாவது டி20 போட்டிக்கு முன்னர் பலத்த மழை பெய்தல் காரணமாக போட்டி தாமதமாக தொடங்கியது.

- Advertisement -

மேலும் இரு அணிகளும் தலா 12 ஓவர்கள் மட்டுமே விளையாடும் என்று ஓவர்களின் அளவு குறைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணியானது நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் குவித்தது. அயர்லாந்து அணி சார்பாக இளம் வீரர் ஹாரி டெக்டர் 64 ரன்களை குவித்தார். பின்னர் 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 9.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 111 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை எளிதாக வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Yuzvendra Chahal

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என்கிற கணக்கில் முன்னிலையில் உள்ள வேளையில் இந்த ஆட்டத்தில் இந்திய அணி சார்பாக 3 ஓவர்கள் வீசிய யுஸ்வேந்திர சாஹல் 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தியதால் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் சாஹல் சில சுவாரஸ்யமான விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : அயர்லாந்து போன்ற குளிரான நாட்டில் பந்து வீசுவது என்பது மிகவும் கடினம். இன்று நான் மிகவும் குளிரில் நடுங்கியபடி பந்துவீசினேன். இதுபோன்ற சூழ்நிலையை சமாளித்து பந்து வீசுவது என்பது சில முறை கடினமாக இருக்கும். ஆனாலும் என்னை கேப்டன் பாண்டியா சுதந்திரமாக பந்து வீசச் செய்தார். எனவே நான் விரும்பிய இடத்தில் என்னால் பந்துவீச முடிந்தது.

இதையும் படிங்க : ஐ.பி.எல் தொடரில் விளையாட இவர் தகுதியானவர். பேட்டை பரிசளித்து அயர்லாந்து வீரரை பாராட்டிய பாண்டியா

இப்போதும் இந்த கிளைமேட் மிகவும் குளிராக உள்ளது. தற்போது கூட நான் ஓகேவாக இல்லை. குளிரின் தாக்கத்தால் மூன்று சுவட்டர்களை அணிந்தபடி தான் இருக்கிறேன் என்று ஆட்டநாயகன் யுஸ்வேந்திர சாஹல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement