- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அது தெரியாம விமர்சிக்காதிங்க.. பும்ரா வேணும்ன்னா இந்தியா இதை செஞ்சு தான் ஆகனும்.. புவனேஸ்வர் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா 2016ஆம் ஆண்டு தோனி தலைமையில் இந்தியாவுக்காக அறிமுகமானார். குறைந்த தூரம் மட்டுமே ஓடிவந்து வித்தியாசமான ஆக்சனுடன் பவுலிங் செய்த அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்த முடியாது என்று பலரும் வீரர்கள் கணித்தார்கள். ஆனால் 2018ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான பும்ரா சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார்.

வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த அவர் 2018/19ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா முதல் முறையாக டெஸ்ட் தொடரில் வெல்ல உதவினார். அப்போதிலிருந்து சிறப்பாக விளையாடிய பும்ரா ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராக முன்னேறி சாதனை படைத்தார். கடந்த ஆஸ்திரேலிய தொடரில் மற்ற இந்தியர் பவுலர்கள் தடுமாறினார்கள்.

- Advertisement -

புரியாத விமர்சகர்கள்:

அப்போது 5 போட்டிகளிலும் முழு மூச்சுடன் விளையாடிய பும்ரா ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்டு 32 விக்கெட்டுகள் எடுத்தார். அதனாலேயே காயத்தை சந்தித்த அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் இங்கிலாந்தில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டது. துரதிஷ்டவசமாக அவர் விளையாடிய 3 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெறவில்லை.

அதன் காரணமாக நம்பர் ஒன் பவுலராக இருந்தும் இந்தியாவைச் சேர்ந்தவர்களே பும்ராவை விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் விமர்சிப்பவர்களுக்கு அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் விளையாடுவதால் ஏற்படும் பணிச்சுமை பற்றி தெரியாது என புவனேஸ்வர் குமார் தெரிவித்துள்ளார். பும்ரா போன்ற தனித்துவமான திறமையும் ஆக்ஷனையும் கொண்டவர் வேண்டுமெனில் இந்திய அணி அவருடைய பணிச்சுமையை நிர்வகிப்பது முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

புவனேஸ்வர் ஆதரவு:

இது பற்றி புவனேஸ்வர் குமார் பேசியது பின்வருமாறு. “பும்ரா கொண்டிருக்கும் பவுலிங் ஆக்சன் காரணமாக அவருக்கு காயங்கள் ஏற்படும். இத்தனை வருடங்களாக 3 விதமான கிரிக்கெட்டிலும் விளையாடி போட்டியை கொடுத்து வரும் அவரைப் போன்றவர் நீண்ட காலம் தாக்குப் பிடிப்பது மிகவும் கடினம். எனவே அவர் 5 போட்டிகளில் 3இல் மட்டும் விளையாடுவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை”

இதையும் படிங்க: தோனியால் 2008இல் ரிட்டையராக முடிவெடுத்தேன்.. சச்சின் தான் 1999 அனுபவத்தை சொல்லி தடுத்தாரு.. சேவாக் பேட்டி

“பும்ராவால் எவ்வளவு விளையாட முடியும் என்பதை தேர்வுக்குழுவினர் தெரிந்துள்ளார்கள். அதுவே போதும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். ஏனெனில் அந்த 3 போட்டிகளிலேயே பும்ராவால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் ஒரு வீரர் 3 போட்டிகளில் விளையாடி தாக்கத்தை ஏற்படுத்தினால் அதுவே போதுமானது. அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் விளையாடுவது எவ்வளவு கடினம் என்பதை மக்கள் புரிந்து கொள்வதில்லை. கடினமான நேரங்களில் பவுலிங் செய்யும் பும்ராவுக்கு மனதளவிலும் உடல் அளவிலும் அழுத்தம் உண்டாகும். நீங்கள் ஒரு வீரரை நீண்ட காலம் விளையாட விரும்பினால் அவரை எப்படியாவது நிர்வகிப்பது முக்கியம்” என்று கூறினார்.

- Advertisement -