தோனியால் 2008இல் ரிட்டையராக முடிவெடுத்தேன்.. சச்சின் தான் 1999 அனுபவத்தை சொல்லி தடுத்தாரு.. சேவாக் பேட்டி

Virender Sehwag
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் அதிரடியான ஓப்பனிங் பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். அந்த காலத்திலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி 2 முச்சதங்கள் அடித்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டிலும் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். குறிப்பாக 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 உலகக் கோப்பையை தோனி தலைமையில் இந்தியா வெல்வதற்கு சேவாக் முக்கிய பங்காற்றினார்.

முன்னதாக 2007இல் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற தோனி இந்திய அணியின் ஃபீல்டிங் துறையை முன்னேற்ற நடவடிக்கைகளை எடுத்தார். அதன் ஒரு பகுதியாக 2008 ஆஸ்திரேலிய முத்தரப்பு தொடரில் சீனியர் வீரர்களால் சிறப்பாக ஃபீல்டிங் செய்ய முடியவில்லை என்று தோனி கருதினார். அதனால் வீரேந்திர சேவாக் உள்ளிட்ட சீனியர்களை தோனி சுழற்சி முறையில் பயன்படுத்தினார்.

- Advertisement -

தோனியால் ஓய்வு முடிவு:

அப்போது இனிமேலும் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்காது என்பதால் ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வு பெற முடிவெடுத்ததாக வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். அது பற்றி தம்முடைய நண்பரான சச்சின் டெண்டுல்கரிடம் சொன்னதாகவும் சேவாக் கூறியுள்ளார். அப்போது அவசரப்பட்டு உணர்ச்சிகளை மையப்படுத்தி ஓய்வு முடிவை எடுக்காதீர்கள் என்று சொன்ன சச்சின் தம்முடைய மனதை மாற்றி தொடர்ந்து விளையாட உதவியதாகவும் சேவாக் கூறியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் சேவாக் பேசியது பின்வருமாறு. “2007 – 08இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் நான் முதல் 3 போட்டிகளில் விளையாடினேன். பின்னர் எம்எஸ் தோனி என்னை அணியிலிருந்து நீக்கினார். அதன் பின் நீண்ட இடைவெளியில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது பிளேயிங் லெவனில் நமக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டால் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று உணர்ந்தேன்”

- Advertisement -

தடுத்த சச்சின்:

“அப்போது டெண்டுல்கரிடம் சென்ற நான் ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வு பெற நினைத்துக் கொண்டிருப்பதைப் பற்றி சொன்னேன். அதைக்கேட்ட சச்சின் அதை ஏற்கவில்லை. மேலும் நானும் 1999 – 2000 காலங்களில் இதே சூழ்நிலையில் இருந்தேன். ஆனால் அந்த கடினமான காலம் வந்து சென்று விட்டது. நீங்களும் அதே போன்ற தொட்டியில் இருக்கிறீர்கள்”

இதையும் படிங்க: ரஜத் படிதார் பெருசா ஒன்னும் செய்யல.. ஆர்சிபி கோப்பையை வெல்ல இதான் காரணம்.. புவனேஷ்வர் பேட்டி

“ஆனால் இதுவும் கடந்து போகும். உணர்ச்சிகரமாக இருக்கும் போது எந்த முடிவையும் எடுக்காதீர்கள். 1 – 2 தொடர்கள் வரை உங்களுக்கு நீங்களே நேரம் கொடுங்கள், பின்னர் ஓய்வு பற்றி முடிவு எடுங்கள் என்று சச்சின் சொன்னார்” எனக் கூறினார். அப்படி சச்சின் கொடுத்த ஆலோசனையை கேட்ட சேவாக்கிற்கு மீண்டும் தோனி ஒரு கட்டத்தில் வாய்ப்பு வழங்கினார். அந்த வாய்ப்பில் அசத்திய சேவாக் மேற்கொண்டு 2013 வரை விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Advertisement