விராட் கோலியின் ஆட்டத்தால் எங்க வியாபாரமே போச்சு. சரிவை கண்ட ஆன்லைன் வர்த்தகம் – வெளியான கிராப் இதோ

Virat Kohli
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி பரபரப்புக்கு சற்றும் குறைவின்றி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது நான்கு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான அணியை வீழ்த்தி வெற்றியும் கண்டது. இந்த போட்டியை மட்டும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒரு கோடியே 80 லட்சம் பேர் நேரலையில் கண்டு களித்துள்ளனர்.

Virat Kohli 1

- Advertisement -

குறிப்பாக இந்த போட்டியின் போது மைதானத்தில் இருந்த ஒரு லட்சம் பார்வையாளர்களை தவிர்த்து உலகெங்கிலும் அதிக ரசிகர்கள் இந்த போட்டியை கண்டு களித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய அணி இரண்டாவது பேட்டிங் செய்யும்போது கடைசி மூன்று நான்கு ஓவர்களின் போது இந்த போட்டியை தொலைக்காட்சி வாயிலாக நேரலையில் கண்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் விராட் கோலி விளையாடிக் கொண்டிருந்த அந்த கடைசி சமயத்தில் ஆன்லைன் வர்த்தகமும் மிகப்பெரிய சரிவை கண்டுள்ளது. அதன்படி பாரத் பே நிறுவனம் வெளியிட்ட ஒரு புள்ளி விவரம் தற்போது அவர்களின் வீழ்ச்சியை தெளிவாக காண்பித்துள்ளது. தீபாவளி நெருங்கி வந்த வேளையில் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணி முதல் 1:30 மணி வரை நல்ல முன்னேற்றத்தில் இருந்த பாரத் யுபிஐ ட்ரான்ஸேக்ஷன் ஆனது பாகிஸ்தான் பேட்டிங் செய்யும்பொழுது 7.5% ஆக குறைந்திருந்தது.

Bharat Pe

இதுவே அவர்களுக்கு ஒரு சரிவாக பார்க்கப்பட்ட வேளையில் அதன் பின்னர் இந்தியா பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது 5 மணி தாண்டிய நிலையில் கடைசி நேரத்தில் விராட் கோலி அதிரடியாக விளையாடி கொண்டிருந்ததால் அனைவரது கவனமும் இந்தியா பாகிஸ்தான் போட்டி மீது திரும்பியது. இதனால் விராட் கோலி பேட்டிங் செய்து கொண்டோருந்த அந்த இறுதி நிமிடங்களில் பாராத் பே 22 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ளது.

- Advertisement -

இது குறித்த தகவலும் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த போட்டியில் இறுதிவரை மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி 53 பந்துகளில் 82 ரன்கள் குவித்து இந்திய அணி வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இதையும் படிங்க : டி20 உ.கோ’யில் மெகா அதிர்ச்சி, அதிரடி இங்கிலாந்தை மண்ணை கவ்வ வைத்த கத்துக்குட்டி வரலாற்று படைத்தது எப்படி?

அவரது இந்த பரபரப்பான ஆட்டமும், இந்தியா பாகிஸ்தான் போட்டி என்பதனாலும் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளதாகவும் பின்னர் இந்தியா பாகிஸ்தான் போட்டி முடிந்த சில மணி நேரங்களுக்கு பிறகே மீண்டும் ஆன்லைன் ஷாப்பிங் இயல்பான நிலைக்கு திரும்பியதாகவும் தற்போது புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement