- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஆஸியில் கிரேட்ன்னு புகழ்ந்தவங்க.. இன்று இது புரியாம பும்ராவை குறை சொல்லாதீங்க.. பரத் அருண் பதிலடி

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெட்ட டெஸ்ட் தொடரை 2 – 2 (5) என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியது. அந்த வெற்றிக்கு பவுலிங் துறையில் முகமது சிராஜ் 23 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றினார். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலகின் நம்பர் ஒன் பவுலர் ஜஸ்ப்ரித் பும்ரா காயத்தை தவிர்ப்பதற்காக 3 போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.

ஆச்சரியப்படும் வகையில் அந்த 3 போட்டிகளிலும் இந்தியா வெற்றி காணவில்லை. அதன் காரணமாக அவரை சில முன்னாள் வீரர்களும் பல ரசிகர்களும் விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக நாட்டுக்காக காயமடையாமல் இருக்கும் அனைவரும் விளையாட வேண்டும் என்று சந்தீப் பாட்டில் விமர்சித்தார். நம்பர் ஒன் பவுலர் ஜஸ்ப்ரித் பும்ரா விளையாடிய 3 போட்டிகளிலும் எதிர்பார்ப்புக்கு நிகராக செயல்படவில்லை என்று இர்பான் பதான் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

6 மாசத்துக்கு முன் புகழ்ந்த உலகம்:

மேலும் நாட்டுக்காக விளையாடும் போட்டிகளை பும்ரா தேர்ந்தெடுக்கும் உரிமையை பெற்றுள்ளதையும் சில முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முடிந்த ஆஸ்திரேலிய தொடரில் ஜஸ்ப்ரித் பும்ரா முழுமையாக 5 போட்டிகள் விளையாடி 32 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு முழு மூச்சுடன் போராடியதாக முன்னாள் பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் கூறியுள்ளார்.

அப்போதெல்லாம் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்று பும்ராவை பாராட்டியவர்கள் இன்று முதுகில் அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் 5 போட்டிகளில் விளையாட முடியவில்லை என்று புரிந்து கொள்ளாமல் விமர்சிப்பதாக அருண் சாடியுள்ளார். இது பற்றி அருண் பேசியது பின்வருமாறு. “பும்ராவை பற்றிய விமர்சனப் பேச்சுக்களை கேட்பது சோகமாக இருக்கிறது. அவர் மிகவும் தீவிரமான அறுவை சிகிச்சையை செய்து கொண்டார்”

- Advertisement -

இன்று விமர்சிக்கும் உலகம்:

“அந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்திருந்தால் பும்ரா எப்போதும் போல விளையாடியிருப்பார் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் தற்போது அவருடைய முதுகில் மிகவும் தீவிரமான பிரச்சனை இருக்கிறது. இவை அனைத்தும் பும்ரா தாம் விளையாடும் போட்டிகளைத் தேர்ந்தெடுக்கிறார் என்பதைப் பொறுத்தது கிடையாது”

இதையும் படிங்க: “திஸ் இஸ் நாட் எ யங் டீம்”, “திஸ் இஸ் கன் டீம்” இங்கி தொடர் ஆரம்பித்த போது கம்பீர் சொன்ன வார்த்தை – கருண் நாயர் பேட்டி

“ஆஸ்திரேலியாவில் முழுமையாக விளையாடிய போது கிரேட்டஸ்ட் பவுலர் என்று புகழப்பட்டவர் இன்று விமர்சனங்களை சந்திப்பது நியாயமற்றது. இங்கிலாந்தில் 3 போட்டிகளில் 2 ஐந்து விக்கெட்டுகள் எடுத்த அவர் சிறப்பாக செயல்படாமல் போய் விட்டாரா? இத்தனைக்கும் அவர் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று ஆரம்பத்திலேயே அறிவித்து விட்டார். அவருடைய உடல் தற்போது அப்படி இருக்கிறது. அதையும் தாண்டி விளையாடும் அவரை நாம் புரிந்துகொள்ள வேண்டும்” என்று விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்தார்.

- Advertisement -