“திஸ் இஸ் நாட் எ யங் டீம்”, “திஸ் இஸ் பர்பெக்ட் டீம்” இங்கி தொடர் ஆரம்பித்த போது கம்பீர் சொன்ன வார்த்தை – கருண் நாயர் பேட்டி

Gambhir and Karun
- Advertisement -

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி அந்த தொடரினை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்தது. இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அனுபவ வீரரான விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்ததால் இந்திய அணி இந்த தொடரை எவ்வாறு சமாளிக்கப் போகிறது? என்பது குறித்த கேள்வி இருந்தது.

கவுதம் கம்பீர் கொடுத்த அட்வைஸ் இதுதான் : கருண் நாயர்

ஆனால் அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியானது எந்த இங்கிலாந்து தொடரில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி இந்த ஐந்து போட்டிகள் கொண்ட தொடரினை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின் போது 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க ஒரு வெற்றியையும் பதிவு செய்திருந்தது அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த இங்கிலாந்து தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இந்திய வீரர்களிடம் என்ன பேசினார்? என்பது குறித்து கருண் நாயர் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : இம்முறை இங்கிலாந்து சென்ற சுப்மன் கில் தலைமையிலான எங்களுடைய அணிக்கு கம்பீர் மிகவும் உறுதுணையாக நின்று ஆலோசனைகளை வழங்கினார். அதிலும் குறிப்பாக இந்த தொடர் ஆரம்பிக்கும் போது விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் வெளியேறியதால் நம்முடைய அணி தற்போது ட்ரான்ஸிசன் பகுதியில் இருப்பதாக யாரும் நினைக்க வேண்டாம் என்று தெரிவித்தார்.

- Advertisement -

அதுமட்டும் இன்றி நம்முடைய அணி இளம் அணி கிடையாது என்றும் நம்முடைய அணி கன் போன்ற அணி. எல்லாருமே உங்களது திறனை வெளிப்படுத்துங்கள். நிச்சயம் இந்த தொடரில் நம்மால் வெகு சிறப்பாக செயல்பட முடியும் என்று கூறினார். அவர் அளித்த ஊக்கம் எங்களை இந்த தொடரில் சிறப்பாக செயல்பட வைத்தது என கருண் நாயர் கூறினார்.

இதையும் படிங்க : 2 தமிழக இளம் வீரர்களை டிரையல்ஸ்க்கு அழைத்த சி.எஸ்.கே நிர்வாகம்.. யார் இவர்கள்? என்ன ஸ்பெஷல்? – விவரம் இதோ

சீனியர் வீரர்களின் வெளியேற்றம் காரணமாக கடந்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்த கருண் நாயர் இந்த தொடரில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் அவருக்கு இன்னும் சில வாய்ப்புகள் வழங்கப்படும் என்று தெரிகிறது.

Advertisement