முகமது சிராஜின் அந்த நம்பிக்கையை ரவி சாஸ்திரி மனதார பாராட்டினாரு – சுவாரசிய தகவலை பகிர்ந்த பரத் அருண்

Bharat-Arun-and-Siraj
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளரான பரத் அருண் அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் முகமது சிராஜ் இந்திய அணிக்காக எவ்வாறு அறிமுகம் ஆகினார். அவரது தேர்வு எப்படி நடைபெற்றது? என்பது குறித்த சில சுவாரசியமான விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் அளித்துள்ள இந்த கருத்து தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியிலும் பெரிய அளவு கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் ரவி சாஸ்திரி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தபோது அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருண் பணியாற்றி வந்தார்.

Siraj

- Advertisement -

மேலும் கேப்டனாக விராட் கோலி இருந்த அந்த சமயத்தில் இந்தக் கூட்டணியிலான இந்திய அணி பல்வேறு சாதனைகளை படைத்தது. இந்நிலையில் முகமது சிராஜ் குறித்து பேசியிருந்த அருண் பரத் கூறுகையில் : கடந்த 2016-17ஆம் ஆண்டில் ஐதராபாத் அணிக்காக ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடிய முகமது சிராஜ் அந்த தொடரில் 41 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். ஹைதராபாத் அணிக்காக மிகச் சிறப்பான செயல்பாட்டினை வெளிப்படுத்தியிருந்த அவரை நான் இந்திய ஏ அணியில் விளையாடும் போது சந்தித்தேன்.

அவரது செயல்பாடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பின்னர் ஒவ்வொரு போட்டியிலும் அவர் சிறப்பாக விளையாடி முடித்த பிறகு எனக்கு போன் செய்து “சார் என்னை எப்போது இந்திய அணிக்கு அழைப்பீர்கள்?” என்று கேட்பார். அதற்கு நான் அவரிடம் : “நீ இன்னும் நிறைய விக்கெட்டுகளை கைப்பற்றி அனைவரும் கவனத்தையும் ஈர்த்தால், நிச்சயம் உனக்கான அழைப்பு வரும்” என்று கூறுவேன். அதேபோன்று இந்திய ஏ அணிக்காக தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்ட முகமது சிராஜ் ஒவ்வொரு முறையும் மிகச் சிறப்பாக பந்து வீசிய பின்னர் மீண்டும் மீண்டும் என்னை தொலைபேசியில் அழைத்து எனக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும்? எப்போது வாய்ப்பு கிடைக்கும்? என்று கேட்டுக் கொண்டே இருப்பார்.

Ravi Shastri and Siraj

இப்படி ஒவ்வொரு முறையும் நான் இவ்வாறு தொடர்ச்சியாக தொலைபேசியில் அவரிடம் கூறி வருவதை கவனித்த ரவி சாஸ்திரி : யார் அவர்? உங்களிடம் அடிக்கடி போன் செய்து வாய்ப்பு கேட்கிறார்? என்று கேட்டார். அப்போது நான் முகமது சிராஜ் குறித்து அவரிடம் தெளிவாக கூறினேன். பின்னர் ரவி சாஸ்திரி முகமது சிராஜை பாராட்டி என்னிடம் ஒரு வார்த்தையை சொன்னார். அப்படி ரவி சாஸ்திரி கூறுகையில் : நிச்சயம் முகமது சிராஜின் நம்பிக்கைக்கு நான் பெரிய பாராட்டினை அளிப்பேன். ஏனெனில் முகமது சிராஜ் அவரது திறமை மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தால் இப்படி தொடர்ச்சியாக உங்களுக்கு போன் செய்து வாய்ப்பு கேட்பார் அந்த வீரரின் தன்னம்பிக்கை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று ரவி சாஸ்திர பாராட்டினார்.

- Advertisement -

பிறகு 2019 ஆம் ஆண்டு வாக்கில் மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இடம்பிடித்த அவர் இன்று மிகச் சிறப்பான பந்துவீச்சாளராக மாறி நிற்பதில் மகிழ்ச்சி என பரத் அருண் கூறியது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்காக முகமது சிராஜ் அறிமுகமாகியிருந்தாலும் ஆரம்ப காலத்தில் அவரது பந்துவீச்சில் அதிக ரன்கள் கசியவே உடனடியாக அவர் இந்திய அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டார்.

இதையும் படிங்க : ஐபிஎல் துவங்குதற்கு முன்பே அதிரடியான அறிவிப்பை ஓப்பனாக வெளியிட்ட பென் ஸ்டோக்ஸ் – சிஎஸ்கே ரசிகர்கள் ஏமாற்றம்

ஆனால் அதன் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் மீண்டும் அணியில் இடம் பிடித்த அவர் அடுத்தடுத்து மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இன்று இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக விளையாடி வருகிறார். 2017 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான அவர் இதுவரை இந்திய அணிக்காக 17 டெஸ்ட் போட்டிகள், 21 ஒருநாள் போட்டிகள் மற்றும் 8 டி20 போட்டிகளில் அவர் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement