ரொம்ப டயர்டா இருக்கு. நான் ஸ்லோவா தான் போடப்போறேன்னு – புலம்பிய பும்ராவிற்கு அறிவுரை கூறிய கோச்

Bumrah
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டிலிருந்து பெரும்பாலான போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார். அவர் இந்திய அணியில் விளையாடாதது ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை என சில முக்கியமான தொடர்களை இந்திய அணி தவறவிடவும் ஒரு காரணமாக அமைந்தது. அதனை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மற்றும் சிகிச்சை மேற்கொண்டு வரும் அவர் ஆஸ்திரேலியா அணிக்கெதிராக தற்போது நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Bumrah 1

- Advertisement -

ஆனால் இந்த டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக வெளியான அறிவிப்பில் பும்ரா முழுவதுமாக உடற்தகுதியை எட்டாததால் இந்த தொடரிலும் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஆர்.ஸ்ரீதர் தனது சுயசரிதை புத்தகத்தில் பும்ரா குறித்த சில சுவாரஸ்யமான விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து அவர் குறிப்பிட்டதாவது :

கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது முதல் மூன்று ஆட்டங்களின் முடிவில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி சாதனை படைத்திருந்தது. அப்போது மெல்போர்னில் நடந்த மூன்றாவது போட்டியில் பும்ரா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

Bumrah

ஆனால் நான்காவது போட்டி சிட்னி மைதானத்தில் நடக்கும் போது இந்த மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம் கிடையாது. எனவே இந்த மைதானத்தில் நான் விக்கெட்டை வீழ்த்துவது கடினம். அதுமட்டுமின்றி நான் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மிகவும் சோர்வாக இருக்கிறேன், எனவே நான் மெதுவாக பந்து வீசப் போகிறேன் என்று பந்துவீச்சு பயிற்சியாளரிடம் கூறினார்.

- Advertisement -

அப்போது பந்துவீச்சு பயிற்சியாளரான பரத் அருண் அவரிடம் கூறுகையில் : நீங்கள் இந்த போட்டியில் மெதுவாக பந்து வீசுங்கள். ஆனால் பேட்ஸ்மேன்களுக்கு நீங்கள் சோர்வாக இருப்பது தெரியக்கூடாது. ஏனெனில் அடுத்த முறை பேட்ஸ்மேன்கள் உங்களை எதிர்கொள்ளும் போது சுலபமாக விளையாடி விடலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு வந்துவிடும். அதே நீங்கள் வழக்கம் போல் வேகமாக பந்து வீசினால் அடுத்த முறையும் உங்களை கண்டால் அவர்களுக்கு பயம் இருக்கும்.

இதையும் படிங்க : விராட் கோலியை பாத்தா உங்களுக்கெல்லாம் ஜோக்கா இருக்கா? ரசிகர்கள் வியக்கும் வகையில் பாராட்டிய கம்பீர் – காரணம் இதோ

என்னைக் கேட்டால் நீங்கள் இரண்டாவது விடயத்தை செய்தால் தான் நல்லது என்று கூறினார். அதன் பின்னர் அவர் கூறிய வார்த்தைகளை புரிந்து கொண்ட பும்ரா சிறப்பாக பந்துவீசி அந்த போட்டியின் வெற்றிக்கு காரணமாகவும் இருந்தார். அதோடு போட்டி முடிந்து பரத் அருணை தனிமையில் சந்தித்த அவர் பரத் அருணிடம் நன்றி கூறி எனக்கு சரியான பாடத்தை கற்றுக் கொடுத்தீர்கள். இதை நான் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன் என்று தெரிவித்ததாக ஸ்ரீதர் பகிர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement