IND vs ENG : இதே மாதிரி வந்து அடிப்போம், டெஸ்ட் சாம்பியனை சாய்த்தபின் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த வீரர்

Ben Stokes
- Advertisement -

டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்துக்கு எதிராக தனது சொந்த மண்ணில் இங்கிலாந்து பங்கேற்று வந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அபாரமாக செயல்பட்ட அந்த அணி 3 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் வெற்றியுடன் கோப்பையை வென்று மிரட்டியுள்ளது. ஜூன் 2இல் லண்டனில் துவங்கிய இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் மிரட்டலாக செயல்பட்ட இங்கிலாந்து 2 – 0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. அந்த நிலைமையில் ஜூன் 23இல் துவங்கிய இத்தொடரின் சம்பிரதாய கடைசி போட்டியில் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்க்க போராடிய டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து 329 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ENg vs NZ Kane Williamson Ben Stokes

- Advertisement -

அந்த அந்த அணிக்கு கேப்டன் கேன் வில்லியம்சன் உட்பட டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் அதிக பட்சமாக டார்ல் மிட்சேல் 109 ரன்களும் டாம் ப்ளண்ட்ல் 55 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜேக் லீச் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதன்பின் முதல் இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்தை லீஸ் 4, ஜாலி கிராவ்லி 6, ஓலி போப் 5, ஜோ ரூட் 5, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 18, பென் போக்ஸ் 0 என முக்கிய பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் காலி செய்த நியூசிலாந்து பந்துவீச்சில் மிரட்டியது.

மாஸ் இங்கிலாந்து:
அதனால் 55/6 என திணறிய அந்த அணியை 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 261 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த ஜானி பேர்ஸ்டோ – ஜாமி ஓவெர்ட்டன் ஜோடி காப்பாற்றியது. அதில் ஓவர்டன் 97 ரன்களில் அவுட்டானாலும் 24 பவுண்டரிகளை பறக்கவிட்ட பேர்ஸ்டோ சதமடித்து 162 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக டிரென்ட் போல்ட் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து 31 ரன்கள் பின்தங்கிய நிலையில் பேட்டிங் செய்த நியூசிலாந்து முழுமையாக போராடிய போதிலும் 326 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக டாம் ப்ளண்டல் 88* ரன்களும், டாம் லாதம் 76 ரன்களும், டார்ல் மிட்சேல் 56 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் மீண்டும் ஜாக் லீச் 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

Jonny Bairstow ENg vs NZ

இறுதியில் 296 என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்துக்கு ஓலி போப் 82 ரன்களும் ஜோ ரூட் 86* ரன்களும் எடுக்க கடைசியில் 8 பவுண்டரி 3 சிக்சருடன் டி20 இன்னிங்ஸ் ஆடிய ஜானி பேர்ஸ்டோ 71* (44) ரன்களை விளாசி சிக்சருடன் சூப்பர் பினிஷிங் கொடுத்தார். அதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் தனது புதிய பயணத்தை வெற்றியுடன் துவங்கியுள்ளது. ஆம் கடந்த 2017இல் கேப்டனாக பொறுப்பேற்ற ஜோ ரூட் தலைமையில் கடந்த சில வருடங்களாகவே சொந்த மண்ணில் கூட அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த இங்கிலாந்து கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

- Advertisement -

மிரட்டும் இங்கிலாந்து:
அதனால் அதிரடி மாற்றங்களை செய்த அந்த அணி நிர்வாகம் முதலில் பயிற்சியாளரை நீக்கிவிட்டு ஜோ ரூட்டை கேப்டன் பதவியில் இருந்து விலக வைத்து புதிய கேப்டனாக பென் ஸ்டோக்சை நியமித்தது. அவருக்கு உறுதுணையாக அதிரடியை மட்டுமே விரும்பக்கூடிய நியூசிலாந்தின் ஜாம்பவான் பிரண்டன் மெக்கல்லம் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

Brendon Mcuullam Ben Stokes

அவர்களது தலைமையில் முதல் முறையாக நியூசிலாந்தை சொந்த மண்ணில் எதிர்கொண்ட இங்கிலாந்து அப்படியே தலைகீழாக நேர்மாறாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் வெற்றியே முரட்டுத்தனமான ஒயிட்வாஷ் வெற்றியாக பதிவு செய்துள்ளது. இப்படி ஸ்டோக்ஸ் தலைமையில் புத்துயிர் பெற்ற இங்கிலாந்து வரும் ஜூலை 1ஆம் தேதி கடந்த வருடம் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ரத்து செய்யப்பட்ட 5-வது போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது.

- Advertisement -

கடந்த முறை ரூட் தலைமையில் அம்பியாக இருந்த இங்கிலாந்தை மண்ணைக் கவ்வ வைத்த விராட் கோலி தலைமையிலான இந்தியா 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* (4) என முன்னிலை பெற்றது. ஆனால் இம்முறை இரு மடங்கு வலுவான அணியாக மாறியுள்ளதால் புதிய கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் கடைசி போட்டியில் வென்று இந்தியா கோப்பையை வெல்வது சவாலாக மாறியுள்ளது. இந்நிலையில் நியூசிலாந்தை சாய்த்தது போலவே கடைசி போட்டியிலும் விளையாடி தொடரை சமன் செய்வோம் என்று இப்போட்டி முடிந்தபின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இந்தியாவுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க : ENG vs NZ : டெஸ்ட் தொடர் முழுக்க டி20 பேட்டிங், சேவாக்கை முந்தி புதிய சாதனை படைத்த இங்கிலாந்து வீரர்

“எதிரணி யாராக இருந்தாலும் நாங்கள் இதே மனநிலையுடன் விளையாடப் போகிறோம். அது (இந்திய தொடர்) முற்றிலும் வித்தியாசமானது. வித்தியாசமான அட்டாக் செய்யக்கூடிய வீரர்களை கொண்ட எதிரணியாகும். இருப்பினும் நியூசிலாந்துக்கு எதிரான இந்த 3 போட்டியில் வெற்றிக்கு என்ன செய்தோமோ அதை வெள்ளிக்கிழமை இந்தியாவுக்கு எதிராக துவங்கும் டெஸ்ட் போட்டியிலும் செய்வோம்” என்று கூறினார்.

Advertisement