ENG vs NZ : டெஸ்ட் தொடர் முழுக்க டி20 பேட்டிங், சேவாக்கை முந்தி புதிய சாதனை படைத்த இங்கிலாந்து வீரர்

Jonny Bairstow ENg vs NZ
- Advertisement -

வரலாற்றின் முதல் டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்தை தனது சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இங்கிலாந்து எதிர்கொண்டது. ஜூன் 2இல் லண்டனில் துவங்கிய அந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இங்கிலாந்து 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றியது. அந்த நிலைமையில் ஜூன் 23இல் லீட்ஸ் நகரில் துவங்கிய சம்பிரதாய கடைசி போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 329 ரன்கள் மட்டுமே எடுத்தது.

டாம் லாதாம், கேப்டன் கேன் வில்லியம்சன், டேவோன் கான்வே எனது முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்த அந்த அணிக்கு அதிகபட்சமாக மிடில் ஆர்டரில் மீண்டும் அசத்திய டார்ல் மிட்செல் சதமடித்து 109 ரன்களும் டாம் ப்ளண்டல் 55 ரன்களும் எடுக்க இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜேக் லீச் 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்துக்கு லீஸ் 4, ஜாக் கிராவ்லி 6, ஓலி போப் 5, ஜோ ரூட் 5, பென் ஸ்டோக்ஸ் 18 என முக்கிய பேட்ஸ்மேன்களை காலி செய்த நியூசிலாந்து ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தது. அதனால் 55/6 என திணறிய இங்கிலாந்தை அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஜானி பேர்ஸ்டோ – ஜாமி ஓவெர்ட்டன் ஆகியோர் 261 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்தார்கள். அதில் ஓவெர்ட்டன் 97 ரன்களில் அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டாலும் மறுபுறம் அற்புதமாக பேட்டிங் செய்த பேர்ஸ்டோ 24 பவுண்டரியுடன் சதமடித்து 162 ரன்கள் விளாசி அவுட்டானார்.

இங்கிலாந்து அபாரம்:
அதனால் தப்பிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 360 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக டிரென்ட் போல்ட் 4 விக்கெட்டுகளும் டிம் சவுத்தி 3 விக்கெட்டும் எடுத்தனர். அதனால் 31 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த நியூசிலாந்து முடிந்த அளவுக்கு போராடிய போதிலும் 326 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக டாம் ப்ளண்ட்ல் 88*, டாம் லாதம் 76, டார்ல் மிட்சேல் 56 ரன்களை எடுக்க இங்கிலாந்து சார்பில் மீண்டும் ஜேக் லீச்  விகெட்டுகளை சாய்த்தார். அதனால் 296 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்துக்கு ஓலி போப் 82 ரன்களும் நல்ல பார்மில் இருக்கும் ஜோ ரூட் 86* ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

அவர்களை விட கடைசி நேரத்தில் டி20 இன்னிங்ஸ் போல 8 பவுண்டரி 3 சிக்சர்களை பறக்க விட்ட ஜானி பேர்ஸ்டோ 71* (44) ரன்களை 161.35 என்ற ஸ்டிரைக் ரேட்டில் விளாசி சிக்சருடன் சூப்பர் பினிஷிங் கொடுத்தார். அதனால் 296/3 ரன்களை எடுத்த இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3 – 0 (3) என்ற கணக்கில் டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்து கோப்பையை வென்றது. இந்த மிரட்டலான வெற்றியால் வரும் ஜூலை 1-ஆம் தேதி நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டியில் முடிந்தால் எங்களை தோற்கடித்து பாருங்கள் என்று இந்தியாவுக்கு இப்போதே இங்கிலாந்து சவால் விட்டுள்ளது.

தொடர்ச்சியான டி20:
முன்னதாக இந்தத் தொடரில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறோம் என்பதை மறந்த இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஜானி பேர்ஸ்டோ முதல் போட்டியில் தடுமாறினாலும் கடைசி 2 போட்டிகளிலும் எவ்வளவோ தன்னை கட்டுப்படுத்த முயன்றும் ஏதோ ஒரு இன்னிங்சில் வெறித்தனமான டி20 இன்னிங்ஸ்களில் விளையாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். எந்தளவுக்கு என்றால்

- Advertisement -

1. லீட்ஸ் நகரில் நடந்த 3-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் வெறும் 30 பந்துகளில் அரைசதம் விளாசிய அவர் டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் அடித்த 2-வது இங்கிலாந்து பேட்ஸ்மேனாக சாதனை படைத்தார்.

2. நாட்டிங்காம் நகரில் நடந்த 2-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் வெறும் 77 பந்துகளில் சதமடித்த அவர் அதிவேகமாக சதமடித்த 2-வது இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்தார்.

- Advertisement -

3. லீட்ஸ் நகரில் நடந்த 3-வது போட்டியின் முதல் இன்னிங்சில் 144 பந்துகளில் 150 ரன்களைக் கடந்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 ரன்களை கடந்த 2-வது இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற சாதனையை மீண்டும் படைத்தார்.

சேவாக்கை முந்தி:
அதைவிட இந்த தொடர் முழுவதும் களமிறங்கி 3 போட்டிகளில் சந்தித்த 328 பந்துகளில் 394 ரன்களை 120.12 என்ற டி20 ஸ்டிரைக் ரேட்டில் தெறிக்கவிட்ட அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் ரன்களை குவித்த பேட்ஸ்மேன் என்ற புதிய சாதனையைப் படைத்தார்.

இதையும் படிங்க : IND vs IRE : இன்னைக்காவது போட்டி முழுசா நடக்குமா? 2வது போட்டியின் வெதர் ரிப்போர்ட் இதோ

அந்த பட்டியல் இதோ (குறைந்தது 300 பந்துகளை எதிர்கொண்ட பேட்ஸ்மேன்கள்):
1. ஜானி பேர்ஸ்டோ : 394 (328) ரன்கள், 120.12 ஸ்ட்ரைக் ரேட், 2022*
2. பென் ஸ்டோக்ஸ் : 411 (377) ரன்கள், 109.01 ஸ்ட்ரைக் ரேட், தென்னாபிரிக்காவுக்கு எதிராக, 2015/16
3. விரேந்தர் சேவாக் : 491 (454) ரன்கள், 108.14 ஸ்ட்ரைக் ரேட், இலங்கைக்கு எதிராக, 2009

Advertisement