IND vs IRE : இன்னைக்காவது போட்டி முழுசா நடக்குமா? 2வது போட்டியின் வெதர் ரிப்போர்ட் இதோ

Dublin Cricket Ground
- Advertisement -

அயர்லாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பான தொடக்கத்தை பெற்றுள்ளது. ஜூலை 1-ஆம் தேதியன்று இங்கிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் ரோகித் சர்மா உட்பட முதன்மை வீரர்கள் கொண்ட இந்திய அணி பங்கேற்பதால் ஐபிஎல் 2022 கோப்பையை வென்ற ஹர்திக் பாண்டியா தலைமையில் ஏறக்குறைய சமீபத்திய தென் ஆப்ரிக்க தொடரில் விளையாடிய வீரர்களுடன் இத்தொடரில் இந்தியா களமிறங்கியுள்ளது. பயிற்சியாளராக ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மன் மேற்பார்வையில் கடந்த ஜூன் 26-ஆம் தேதியன்று தலைநகர் டப்ளின் நகரில் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் அற்புதமாக செயல்பட்ட இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

IND vs IRE

- Advertisement -

மழையால் ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதமாக துவங்கிய அந்த போட்டி 12 ஓவர்கள் கொண்ட போட்டியாக இரவு 11.20 மணிக்கு துவங்கியது. அதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்து கடுமையான போராட்டத்துக்குப் பின் 108/4 ரன்கள் சேர்த்தது. பால் ஸ்டிர்லிங் 4, கேப்டன் பால்பிரின் 0, டிலேணி 8, டூக்கர் 18 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்த அந்த அணிக்கு அதிகபட்சமாக ஹென்றி டெக்டார் 6 பவுண்டரி 3 சிக்சருடன் 64* (33) ரன்களை பறக்கவிட்டார்.

வைட்வாஷ் செய்யுமா:
அதை தொடர்ந்து 108 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவிற்கு எதிர்பாராத வகையில் தொடக்க வீரராக களமிறங்கி வெளுத்து வாங்கிய தீபக் ஹூடா 47* (29) ரன்களும் இஷான் கிசான் 26 (11) ரன்களும் ஹர்டிக் பாண்டியா 24 (12) ரன்களும் எடுத்ததால் 9.2 ஓவரிலேயே 111/3 ரன்களை எடுத்து இந்தியா வென்றது. அதனால் 1 – 0* என்ற ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ள இந்தியா 2 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் வெற்றியுடன் இந்த சுற்றுப்பயணத்தை நிறைவு செய்ய போராட உள்ளது.

chahal deepak hooda IND vs IRE

அயர்லாந்துக்கு எதிராக எந்த வகையான கிரிக்கெட்டிலும் இதுவரை ஒரு போட்டியில் கூட தோற்றதில்லை என்ற சூழ்நிலையில் ஜூன் 28-ஆம் தேதியான இன்று நடைபெறும் 2-வது போட்டியிலும் இந்தியா வெல்லும் என்று இந்திய ரசிகர்கள் நம்புகின்றனர். அப்படி வைட்வாஷ் வெற்றி பெற்றால் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக விராட் கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத சூழ்நிலையிலும் இந்திய அணிக்கு மிகப்பெரிய புத்துணர்ச்சியாக அமையும்.

- Advertisement -

மழை வழிவிடுமா:
ஆனால் களத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு அயர்லாந்தை ஒயிட் வாஷ் செய்யும் அளவுக்கு முதலில் மழை வழி விடுமா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது. ஏனெனில் மழையால் பாதிக்கப்பட்ட முதல் போட்டி நடைபெற்ற அதே மலஹைட் வில்லேஜ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் தான் இப்போட்டியும் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் டாஸ் வீசியதற்கு பின்பு ஜோராக வந்த மழை போட்டியை மொத்தமாக முடக்குவதைப் போல் அடித்து நொறுக்கியது. நல்லவேளையாக எப்படியாவது நின்றுவிட வேண்டும் என்று வேண்டிக்கொண்ட ரசிகர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்த மழை பாதியிலேயே சென்றதால் முதல் போட்டியில் இந்தியா வென்றது.

Dublin Malahide Cricket Ground

இந்நிலையில் முதல் போட்டிக்கு முன்பாக அறிவிக்கப்பட்ட வானிலை அறிக்கையில் 2-வது போட்டி முழுமையாக ரத்து செய்யப்படும் அளவுக்கு மழைக்கான வாய்ப்பிருந்தது. ஆனால் ஜூன் 27இல் அடித்த வெயில் காரணமாக ஜூன் 28-ஆம் தேதியான இன்று டப்ளின் நகரில் மழைக்கான வாய்ப்பு குறைந்துள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் லேட்டஸ்ட் அறிக்கையில் கூறியுள்ளது. அந்த முழு ரிப்போர்ட்டை பார்ப்போம்:

- Advertisement -

1. முதலில் இப்போட்டி உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்குத் துவங்கி இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது.

Deepak Hooda Dinesh karthik IND vs IRE

2. அதில் மாலை 4 மணி முதல் 6 மணிவரை 18 டிகிரி செல்சியஸ் வெப்பத்துடன் சூரிய வெளிச்சம் காணப்படும் என்று அறிவித்துள்ள அந்நாட்டு வானிலை மையம் 10% மட்டுமே மழைக்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறது.

- Advertisement -

3. 7, 8 மணியளவில் 17 டிகிரி செல்சியஸ் என வெப்பம் குறைந்து மேகக் கூட்டங்கள் வருமென்று கணித்துள்ள அந்நாட்டு வானிலை மையம் அந்த சமயத்தில் மழைக்கான வாய்ப்பு 22% என்று அறிவித்துள்ளது. எனவே இப்போட்டியின் 2-வது இன்னிங்சில் லேசான தூரல் மழை வந்தாலும் அது போட்டியை பாதிக்காது என்று தெரியவருகிறது.

இதையும் படிங்க : தினேஷ் கார்த்திக்-க்கு இந்த பதவி வழங்கப்பட்டது ஒருவகையில் நல்லது தான் – ஆகாஷ் சோப்ரா ஓபன்டாக்

4. அப்படியே வந்தாலும் கடந்த போட்டியை போல் 8 ஓவர்கள் குறைக்கப்படாமல் ஒருசில ஓவர்கள் மட்டுமே குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி இருந்தாலும் இப்போட்டியில் மழைக்கான வாய்ப்பு மிகமிக குறைவு என தெரிய வருவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement