இதுக்கு முன்னாடி இப்படி பாத்ததே இல்ல.. என்ன நடக்கும்ன்னு தெரியல.. இந்தியாவின் திட்டத்தை விளாசிய ஸ்டோக்ஸ்

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதி வருகின்றன. அதில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இந்த தொடரில் அதிரடியாக பேட்டிங் செய்து இந்தியாவை தோற்கடிப்போம் என்று எச்சரித்த இங்கிலாந்து முதல் போட்டியில் வென்று முன்னிலை பெற்றது.

இருப்பினும் அதற்கடுத்த 2 போட்டிகளில் பெரிய இலக்கை சேசிங் செய்யும் போது சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடாத அந்த அணி அதிரடியாக விளையாட முயற்சித்து அடுத்தடுத்த படுதோல்விகளை சந்தித்தது. அதன் காரணமாக பிப்ரவரி 23ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் துவங்கும் நான்காவது போட்டியில் வென்றால் மட்டுமே இத்தொடரை வெல்வதற்கான வாய்ப்பைத் தக்க வைக்க முடியும் என்ற இக்கட்டான நிலைக்கு இங்கிலாந்து தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் அதிருப்தி:
முன்னதாக இந்த தொடரில் இதுவரை நடைபெற்ற முதல் 3 போட்டிகளிலும் பிட்ச் ஆரம்பத்தில் ஃபிளாட்டாகவும் பின்னர் சுழலுக்கு சாதகமாகவும் இருந்தது. ஆனால் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ மைதானத்தின் பிட்ச் வரலாற்றில் ஸ்பின்னர்களுக்கு அதிக சாதகமாக இருந்து வருகிறது.

அந்த வரிசையில் இந்த போட்டியிலும் ராஞ்சி மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ராஞ்சி மைதானத்தின் பிட்ச் போல இதற்கு முன் தன்னுடைய வாழ்நாளில் பார்த்ததில்லை என இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் விமர்சித்துள்ளார். குறிப்பாக பிட்ச்சின் ஒரு பகுதியில் மட்டும் அதிகமான புற்கள் காணப்படுவதாக தெரிவிக்கும் அவர் போட்டி துவங்குவதற்கு முன்பாகவே அதில் லேசான வெடிப்புகள் இருப்பதாக அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் தங்களை தோற்கடிப்பதற்காக இந்தியா இப்படி ஒரு திட்டத்தை கையிலெடுத்துள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பிபிசி ஸ்போர்ட் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “அதைப் போல இதற்கு முன் நான் பார்த்ததில்லை. அதை பார்த்த எனக்கு எந்த ஐடியாவும் தெரியவில்லை. எனவே இப்போட்டியில் என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியாது. குறிப்பாக எதிரெதிர் முனைகளின் ஒரு பக்கத்தை நீங்கள் பார்த்தால் அது இந்தியாவில் இதற்கு முன் நான் பார்த்து பழகிய பிட்ச்களை விட வித்தியாசமாக இருக்கிறது”

இதையும் படிங்க: என்னால சொல்லாம இருக்கமுடியல.. இப்போ நீங்க நல்ல டெஸ்ட் பிளேயர் இல்ல – ஏ.பி.டி காட்டம்

“குறிப்பாக பெவிலியன் இருக்கும் பக்கத்தில் பச்சை நிறமாகவும் புல்வெளிகளாகவும் காணப்பட்டது. ஆனால் அருகில் சென்று பார்த்தால் அது வித்தியாசமாக தோன்றியது. இப்போதே மிகவும் இருட்டாகவும் நொறுங்கியதாகவும் காணப்படும் அதில் விரிசல்கள் இருக்கின்றன” என்று கூறினார். இதைத்தொடர்ந்து நடைபெறும் நான்காவது போட்டியில் பும்ரா ஓய்வெடுப்பதால் அக்சர் படேலை இந்தியா அணிக்குள் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடப்பட்டது.

Advertisement