என்னால சொல்லாம இருக்கமுடியல.. இப்போ நீங்க நல்ல டெஸ்ட் பிளேயர் இல்ல – ஏ.பி.டி காட்டம்

ABD
- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கு நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இரண்டு தோல்விகளை சந்தித்துள்ள இங்கிலாந்து அணியானது இந்த தொடரில் ஒன்றுக்கு இரண்டு (1-2) என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

அதோடு எதிர்வரும் கடைசி இரண்டு போட்டியிலும் அவர்கள் வெற்றி பெறுவது கடினம் என்றே பார்க்கப்பட்டு வருகிறது. இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட்டின் மோசமான பேட்டிங் ஃபார்ம் அவர்களது அணிக்கு பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது.

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை மிகச் சிறப்பான வீரராக பார்க்கப்படும் ஜோ ரூட் ஏற்கனவே பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இருந்தாலும் தற்போது இங்கிலாந்து அணி விளையாடி வரும் பாஸ்பால் கிரிக்கெட் காரணமாக அதிரடியாக விளையாட ஆசைப்பட்டு தொடர்ச்சியான சொதப்பலை அவர் சந்தித்து வருகிறார். குறிப்பாக இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த இந்த மூன்று டெஸ்ட் போட்டியில் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கதா அவர் 100 ரன்களை கூட மொத்தமாக அடிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்.

நல்ல துவக்கம் கிடைத்தாலும் தெளிவில்லாமல் ஆடுவது, ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுவது, எந்த பிளானும் இல்லாமல் ஆடுவது என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வரும் இவரது பேட்டிங் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளது. இவ்வேளையில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஏபிடிவில்லியர்ஸ் ஜோ ரூட் குறித்து காட்டமான சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

ஜோ ரூட்டுக்கு எதிராக நான் முன்னர் விளையாடிய போதெல்லாம் அவர் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருப்பதாக உணர்ந்தேன். ஆனால் தற்போது அனைத்துமே மாறிவிட்டது. அதற்கு பாஸ்பால் தான் காரணம். ஆனால் ஜோ ரூட் போன்ற ஒரு வீரர் இது போன்ற முறையை கையாளாமல் தங்களுக்கு இயல்பாக வரும் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். தலைசிறந்த வீரராக பார்க்கப்பட்ட அவர் இப்படி விளையாடும் போது அவரை ஒரு நல்ல டெஸ்ட் பிளேயர் என்று எப்படி சொல்ல முடியும்.

இதையும் படிங்க : ரூபாய் 5 கோடி மதிப்பில் பிரமாண்ட அப்பார்ட்மெண்டை விலைக்கு வாங்கிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – எங்கு தெரியுமா?

அணி நிர்வாகம் இப்படி தான் ஆட வேண்டும் என்று சொன்னால் ரூட் போன்ற வீரர்கள் தங்களது இயல்பான ஆட்டத்தை விளையாட விட வேண்டும் என நிர்வாகத்திடம் கேட்டுக்கொள்ள வேண்டும். அதிரடியாக விளையாடும் வீரர்கள் அவர்கள் விருப்பப்படி ஆட்டட்டும். உங்களுடைய இயல்பான ஆட்டம் எப்படி இருக்கிறதோ அதனை நீங்கள் ஆடுங்கள் என ஜோ ரூட்டுக்கு எதிராக ஏபிடி காட்டமான சில கருத்துக்களை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement