ஜெயிச்சிடலாம்னு நம்பிக்கை இருந்துச்சி.. ஆனாலும் இலக்கை எட்டமுடியாமல் போக இதுவே காரணம் – பென் ஸ்டோக்ஸ் பேட்டி

Stokes
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது இங்கு நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே ஹைதராபாத் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது தற்போது இரண்டாவது போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியை தழுவியுள்ளது.

இதன் காரணமாக தற்போது இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமனாகி சுவாரஸ்யமான நிலையை எட்டியுள்ளது. அதன்படி நடைபெற்று முடிந்த இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 396 ரன்களை குவித்தது.

- Advertisement -

பின்னர் இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் 253 ரன்களை குவிக்கவே பின்னர் 143 ரன்கள் முன்னிலையுடன் தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணியானது 255 ரன்கள் குவிக்க இங்கிலாந்து அணிக்கு கடைசி இன்னிங்சில் 399 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதனை துரத்தி விளையாடிய இங்கிலாந்து அணி 292 ரன்கள் மட்டுமே குவித்ததால் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில் :

- Advertisement -

இந்த கடைசி இன்னிங்ஸ்சில் எங்களால் வெற்றி இலக்கை துரத்த முடியும் என்ற முழு நம்பிக்கையும் இருந்தது, ஆனால் ஸ்கோர் போர்டில் இருந்த அழுத்தம் காரணமாகவே எங்களால் இலக்கை நோக்கி செல்ல முடியவில்லை. இரு அணிகளிடம் இருந்தும் மிகச் சிறப்பான ஆட்டம் இந்த போட்டியில் வெளிப்பட்டது. ஒரு நல்ல போட்டியை நாங்கள் இந்த தொடரில் மீண்டும் விளையாடி உள்ளதாக உணர்கிறேன்.

இதையும் படிங்க : எங்க டீமோட சாம்பியன் பிளேயர் இவருதான்.. 2 ஆவது டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு பின்னர் – ரோஹித் சர்மா பேட்டி

எங்களது அணியில் உள்ள அனைவருமே குவாலிட்டியான பிளேயர்கள் இருந்தாலும் இந்திய ஆடுகளங்களின் தன்மையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போன்று செயல்பட வேண்டியது அவசியம். எங்களது அணியில் ஆண்டர்சன் அற்புதமான வீரர். அதேபோன்று இந்திய அணியில் பும்ராவும் மிகச் சிறப்பான வீரர் என பென் ஸ்டோக்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement