முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் இடம்பெறாதது ஏன்? – பென் ஸ்டோக்ஸ் விளக்கம்

Stokes-and-Anderson
- Advertisement -

இங்கிலாந்து அணியை சேர்ந்த 41 வயதான அனுபவ வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் கடந்த 2003-ஆம் ஆண்டு அந்த அணிக்காக அறிமுகமாகி இதுவரை 183 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 690 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதோடு இந்திய மண்ணிலும் ஏற்கனவே மிகச் சிறப்பான செயல்பாட்டை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஜேம்ஸ் ஆண்டர்சன் வெளிப்படுத்தியுள்ளார்.

அதனால் இந்த தொடரிலும் அவர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சிரமத்தை கொடுப்பார் என்று பேசப்பட்டு வந்தது. ஆனால் இந்திய அணிக்கு எதிராக ஹைதராபாத் நகரில் ஜனவரி 25-ஆம் தேதி நாளை துவங்கவுள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் விளையாட மாட்டார் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும் போட்டிக்கு முந்தைய நாளான இன்றே இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனும் வெளியாகி உள்ளது. அந்த அணியில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளராக மார்க் வுட்டும் விளையாடுகிறார்கள். அதுதவிர்த்து பகுதிநேர பவுலர்களாக ஜோ ரூட் மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோர் பந்து வீசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சனை இப்படி அணியில் விளையாட வைக்காதது ஏன் என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில் : நாங்கள் இந்த போட்டியில் ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் மட்டுமே செல்ல விரும்புகிறோம்.

- Advertisement -

அதன் காரணமாகவே அதிவேகமாக பந்துவீசும், அதே நேரத்தில் அந்த வேகத்திலும் ரிவர்ஸ் ஸ்விங் செய்யும் மார்க் வுட்டை அணியில் இணைத்துள்ளோம். அது தவிர்த்து மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்த போட்டியை அணுக நாங்கள் நினைத்ததாலே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மைதானம் சுழற்ப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்ததாலே நாங்கள் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுகிறோம்.

இதையும் படிங்க : இதுக்காக வேலையை விட்டுட்டு ஆபிஸ்ல போய் உட்கார முடியுமா? இங்கிலாந்தின் விமர்சனத்தை கலாய்த்த ரோஹித் சர்மா

ஒருவேளை மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்திருந்தால் நிச்சயம் ஆண்டர்சன் விளையாடி இருப்பார் என்ற தெளிவான பதிலை ஸ்டோக்ஸ் அளித்துள்ளார். இதுவரை இந்திய மண்ணில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஆண்டர்சன் 34 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement