இதுக்காக வேலையை விட்டுட்டு ஆபிஸ்ல போய் உட்கார முடியுமா? இங்கிலாந்தின் விமர்சனத்தை கலாய்த்த ரோஹித் சர்மா

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி துவங்குகிறது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் 12 வருடங்கள் கழித்து தோற்கடிக்கும் முனைப்புடன் இங்கிலாந்து அணி களமிறங்க உள்ளது.

முன்னதாக சுழலுக்கு சாதகமான மைதானங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இத்தொடரில் இந்தியாவை திணறடிப்பதற்காக இங்கிலாந்து அணி 4 ஸ்பின்னர்களை தேர்வு செய்திருந்தது. குறிப்பாக இதற்கு முன் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத சோயப் பஷீர் எனும் இளம் சுழல் பந்து வீச்சாளரை பிரத்தியேகமாக இத்தொடரில் களமிறக்கி இந்தியாவை சாய்க்கும் திட்டத்தை இங்கிலாந்து வைத்திருந்தது.

- Advertisement -

ஆஃபிஸ் போக முடியாது:
இருப்பினும் தற்போது அவருக்கு இந்தியா வருவதற்கான விசா கிடைக்காததால் இங்கிலாந்து பின்னடைவை சந்தித்துள்ளது. குறிப்பாக கடந்த வாரம் வரை துபாயில் பயிற்சி முகாமில் ஈடுபட்டிருந்த இங்கிலாந்து வீரர்கள் அனைவருக்கும் உடனடி விசா வழங்கிய இந்திய அரசு சோயப் பஷீருக்கு மட்டும் இன்னும் கொடுக்கவில்லை. அதனால் தற்போது இந்தியா வராத அவர் துபாயில் இருந்து இங்கிலாந்து திரும்பியுள்ளார்.

ஆனால் அதற்கு சோயப் பஷீர் ஒரு முஸ்லிம் நபர் என்பதால் வேண்டுமென்றே இந்திய அரசு விசா வழங்காமல் தாமதம் செய்வதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக கடந்த 2023 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடும் உஸ்மான் கவஜாவுக்கும் இதே போல் முதல் போட்டியில் விளையாடுவதற்கு தாமதமாக விசா வழங்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன.

- Advertisement -

அதே போலவே ஒரு கேப்டனாக தாம் விரும்பிய வீரர் அணியில் இல்லாதது ஏமாற்றத்தை கொடுப்பதாக பென் ஸ்டோக்ஸ் விமர்சித்துள்ளார். குறிப்பாக கடந்த டிசம்பர் மாதமே டெஸ்ட் தொடருக்கான அணியை அறிவித்தும் இதுவரை ஒரு குறிப்பிட்ட வீரருக்கு மட்டும் விசா வழங்காதது ஏமாற்றத்தை கொடுப்பதாக தெரிவித்துள்ள அவர் இதற்கு முந்தைய காலகட்டங்களிலும் இதே போல் சில வீரர்களுக்கு விசா கிடைக்கவில்லை என்று இந்தியா மீது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

இதையும் படிங்க: ரகானே, புஜாரா கேரியர் முடிந்தது? விராட் கோலியின் இடத்தில் ரஜத் படிடார் ஏன்.. ரோஹித் விளக்கம்

இந்நிலையில் இந்திய அரசு மீது வைக்கப்படும் இந்த அடுக்கடுக்கான விமர்சனங்களுக்கு உங்களின் பதில் என்ன என்று கேப்டன் ரோகித் சர்மாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்தது பின்வருமாறு. “அவருக்காக நான் வருந்துகிறேன். அனேகமாக அவர் முதல் முறையாக இந்தியாவுக்கு வருகிறார் என்று நினைக்கிறேன். ஆனால் துரதிஷ்டவசமாக இதற்காக நான் விசா அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு எந்த முடிவையும் எடுக்க முடியாது. விரைவில் அவர் இந்தியாவுக்கு வருவார் என்று நம்புகிறேன்” என கூறினார்.

Advertisement