அதை பாத்துட்டோம்.. 3 – 1ன்னு வீட்டுக்கு கிளம்புவோம்ன்னு நினைக்காதீங்க.. 5வது போட்டி பற்றி பேசிய பென் ஸ்டோக்ஸ்

Ben Stokes 8
- Advertisement -

இமாச்சலப் பிரதேசம் மாநிலம் தரம்சாலாவில் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி மார்ச் 7ஆம் தேதி நடைபெறுகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த பெரிய தொடரில் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் அதற்கடுத்த 3 போட்டிகளில் ஹாட்ரிக் வெற்றிகளை பெற்ற இந்தியா 3 – 1* என்ற கணக்கில் கோப்பையை ஏற்கனவே வென்று விட்டது.

அதனால் பஸ்பால் அணுகு முறையை பின்பற்றி அதிரடியாக விளையாடுவோம் என்று எச்சரித்த இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முதல் முறையாக ஒரு தொடரில் தோல்வியை சந்தித்து தலை குனிந்தது. இதைத் தொடர்ந்து நடைபெறும் கடைசி போட்டியில் வென்று ஆறுதல் வெற்றியுடன் இத்தொடரை நிறைவு செய்ய இங்கிலாந்து அணி தயாராகியுள்ளது.

- Advertisement -

இங்கிலாந்தின் திட்டம்:
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தரம்சாலா மைதானத்தில் குளிரான வெப்பநிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த மைதானம் இந்தியாவை விட இங்கிலாந்துக்கு தான் சொந்த மண்ணில் விளையாடுவதை போன்ற அனுபவத்தை கொடுக்கும் என்றே சொல்லலாம். இந்நிலையில் தரம்சாலா பிட்ச் தரையை போல் ஓரளவு ஃபிளாட்டாக இருப்பதாக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

அதில் இந்தியாவை வீழ்த்த 2 ஸ்பின்னர்கள் மற்றும் 2 வேகப்பந்து வீச்சளார்களை பயன்படுத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதை விட ஏற்கனவே தொடரை இழந்தாலும் கடைசிப் போட்டியில் வென்று 3 – 2 என்ற கணக்கில் இந்தியாவுக்கு சவாலை கொடுக்காமல் விடைபெற மாட்டோம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “பிட்ச் பார்ப்பதற்கு முன்பாக நாங்கள் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் 1 ஸ்பின்னருடன் விளையாடுவதைப் பற்றி யோசித்தோம்”

- Advertisement -

“ஆனால் ஒன்றுக்கு 2 முறை பிட்ச்சை நேராக பார்த்தப் பின் 2 ஸ்பின்னர்கள் மற்றும் 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவது சரியான முடிவாக இருக்கும் என்று நினைக்கிறேன். பார்ப்பதற்கு தரையைப் போல் தெரியும் இந்த பிட்ச்சில் சற்று அதிகமான புற்கள் இருக்கிறது. எனவே அதில் சோயப் பஷீர், டாம் ஹார்ட்லி ஆகியோருடன் களமிறங்கும் எங்களுக்கு என்ன நடக்கும் என்பது போட்டி நடைபெற நடைபெற தான் தெரியும்”

இதையும் படிங்க: டெஸ்டில் அசத்தியத்திற்காக சிஎஸ்கே அணியில் தோனி பிரமோஷன் கொடுத்தாரு.. 2011 பின்னணி பற்றி மனம் திறந்த அஸ்வின்

“3 – 1* என்ற கணக்கில் இந்த தொடரில் நாங்கள் இருப்பதை நீங்கள் வெற்றிகரமாக பார்க்க மாட்டீர்கள். ஆனால் நான் வித்தியாசமான கோணத்தில் பார்க்கிறேன். நாங்கள் விரும்பிய முடிவு வராவிட்டாலும் ஒரு அணியாக நல்ல முன்னேற்றத்தை சந்தித்துள்ளோம். 3 – 1 அல்லது 4 – 1 என்ற கணக்கில் இத்தொடரை நிறைவு செய்வதை விட 3 – 2 என்று முடிப்பது நன்றாக இருக்கும் என்பது உங்களுக்கு தெரியும். அதைத் தான் நாங்கள் செய்யப் பார்ப்போம்” என்று கூறினார்.

Advertisement