சி.எஸ்.கே பைனலுக்கே போனாலும் சரி. நான் ஒன்னும் பண்ண முடியாது – இப்போவே கண்டிஷன் போட்ட ஸ்டோக்ஸ்

stokes
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் இந்த ஆண்டு 16-வது சீசனானது வரும் மார்ச் மாதம் 31-ஆம் தேதி துவங்கி மே மாதம் 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் இந்த தொடருக்கான வீரர்களின் மினி ஏலமும் நடைபெற்று முடிந்தது. அந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான சில வீரர்களை போட்டி போட்டு வாங்கினர். அந்த வகையில் கடந்த சீசனில் ஐபிஎல் தொடரில் பங்கேற்காமல் இருந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்ட்ரோக்ஸ் இந்த ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலத்தில் கலந்து கொண்டார்.

CSK-Auction

- Advertisement -

இந்த ஏலத்தில் அவரை வாங்க கடுமையான போட்டி நிலவிய வேளையில் இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை 16.25 கோடி என்ற பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுத்தது. இதன் காரணமாக சென்னை அணிக்காக முதல் முறையாக விளையாட பென் ஸ்டோக்ஸ் காத்திருக்கிறார். அதுமட்டுமின்றி தோனிக்கு பிறகு சென்னை அணியை வழிநடத்த போவதும் அவர்தான் என்கிற பேச்சு நிலவி வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான அறிவிப்பின்படி : பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடர் முழுவதுமாக விளையாட மாட்டார் என்றும் ஐபிஎல் தொடரின் இறுதி கட்டப் போட்டிகளை அவர் தவறவிடுவார் என்றும் கூறப்பட்டது. ஏனெனில் ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் அயர்லாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்க இருப்பதினால் முன்கூட்டியே சென்னை அணியிலிருந்து வெளியேறுவார் என்று கூறப்பட்டிருந்தது.

Ben-Stokes

தற்போது ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே அவர் வெளியிட்டுள்ள இன்னொரு கருத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கே சென்னை அணி முன்னேறினாலும் என்னுடைய முன்னுரிமை இங்கிலாந்து அணிக்குத்தான் எனவே நிச்சயம் சிஎஸ்கே பைனலுக்கு சென்றாலும் நான் விளையாட மாட்டேன் இங்கிலாந்து திரும்பி விடுவேன் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய பென் ஸ்டோக்ஸ் கூறுகையில் : சிஎஸ்கே இறுதி போட்டிக்கு தகுதி பெற்றாலும் இங்கிலாந்து அணிக்காகத்தான் விளையாடுவேன். ஐபிஎல் தொடர் முடிந்த மூன்று நாட்களுக்குள் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடர் துவங்க இருக்கிறது. எனவே அதற்கு நான் போதுமான நேரத்தை கொடுத்தாக வேண்டும். அதற்கடுத்து ஆஷஸ் தொடர் நடைபெற இருக்கிறது. அதன் காரணமாக நான் முன்கூட்டியே சிஎஸ்கே அணியிலிருந்து வெளியேறி விடுவேன்.

இதையும் படிங்க : ஐ.பி.எல் தொடரை விட டி.என்.பி.எல் தொடரில் அதிகவிலைக்கு ஏலம்போன சாய் சுதர்ஷன் – அப்படி என்ன இவரிடம் ஸ்பெஷல்?

அதேபோன்று ஐ.பி.எல் தொடரில் விளையாடும் மற்ற இங்கிலாந்து வீரர்களையும் ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வேன் என பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். இப்படி இவ்வளவு பெரிய தொகை கொடுத்து சி.எஸ்.கே அணி அவர் ஏலத்தில் எடுத்தும் பென் ஸ்டோக்ஸ் இப்படி கண்டிஷன் போட்டது போன்று பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் சற்று விமர்சனத்தையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement