- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இனிமேல் கனவுல கூட 400 ரன்ஸ் அடிக்கும் வாய்ப்பு கிடைக்காது.. ஆனா இதுக்காக முல்தரை மதிக்கிறேன்.. பென் ஸ்டோக்ஸ்

ஐசிசி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற தென்னாபிரிக்கா அடுத்ததாக ஜிம்பாப்வே நாட்டில் 2 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அத்தொடரில் எதிர்பார்த்ததை போலவே 2 – 0 (2) என்ற கணக்கில் ஜிம்பாப்வேவை ஒயிட் வாஷ் செய்து தென்னாப்பிரிக்கா தோற்கடித்தது. ஆனால் அத்தொடரில் தென்னாப்பிரிக்க கேப்டன் வியான் முல்தர் 400 ரன்கள் அடித்து உலக சாதனை படைக்கும் வாய்ப்பைத் தவற விட்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

புலவாயோ நகரில் இருக்கும் குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் முல்தர் தென்னாப்பிரிக்க அணியின் தற்காலிக கேப்டனாக விளையாடினார். அந்தப் போட்டியில் சுமாராக பவுலிங் செய்த ஜிம்பாப்பே பவுலர்களை அடித்து நொறுக்கிய அவர் 367* ரன்கள் எடுத்தார். அப்போது பிரைன் லாராவின் 400 ரன்கள் சாதனையை அவர் கண்டிப்பாக உடைப்பார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

- Advertisement -

மறுபடியும் வாய்ப்பு கிடைக்காது:

ஆனால் அப்போது தென்னாப்பிரிக்காவின் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்த அவர் லாராவின் சாதனையை உடைக்கும் வாய்ப்பை தவற விட்டார். அது பற்றி கேட்டதற்கு “அந்த சாதனை கிரிக்கெட்டின் ஜாம்பவானான பிரைன் லாராவிடம் இருப்பதற்கே தகுதியானது” என்று முல்தர் தெரிவித்தார். ஒருவேளை மீண்டும் வாய்ப்பு கிடைத்தாலும் இதையே தாம் செய்வேன் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில் இனிமேல் கனவில் கூட அது போன்ற பொன்னான வாய்ப்பு கிடைக்காது என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மறைமுகமாக தெரிவித்துள்ளார். அதே சமயம் தம்முடைய அணிக்காக சாதனையைப் பற்றி கவலைப்படாமல் டிக்ளர் செய்த அவருடைய செயல் பாராட்டுக்குரியது என்றும் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். இது பற்றி ஸ்டோக்ஸ் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

மிஸ் பண்ணிட்டிங்களே:

“அந்த வாய்ப்பை அவர் மீண்டும் பெறப்போவதில்லை. ஒரு கேப்டனாக அந்த அற்புதமான நாளில் நீங்கள் பாதியில் வெளியேறுவதை விட சாதனையை செய்யவே விரும்புவீர்கள். ஆனால் அவரைப் பொறுத்த வரை அது நியாயமான முடிவு. அந்த சாதனை லாராவுடன் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி அவர் ஏதோ சொன்னார் என்று நினைக்கிறேன். ஆனால் அந்த வாய்ப்பை அவர் மீண்டும் பெறப்போவதில்லை”

இதையும் படிங்க: டுக் பந்துகளுக்கு புதிய டெஸ்டிங் வேணும்.. ஐசிசிக்கு ஸ்டோக்ஸ் வைத்த கோரிக்கையை எதிர்த்த ரிஷப் பண்ட்

“அவரைப் பொறுத்த வரை அது நியாயமான விளையாட்டு. அவர்களைப் பொறுத்த வரை மற்ற பெரிய விஷயங்களை விட வெல்வதே முக்கியம்” என்று கூறினார். முன்னதாக லாராவின் சாதனையை தவற விட்டாலும் தென்னாப்பிரிக்காவுக்காக அதிகப்படுத்த ஸ்கோர் பதிவு செய்த வீரராக முல்தர் சாதனை படைத்தார். அத்துடன் அறிமுகப் போட்டியிலேயே அதிக ரன்கள் குவித்த கேப்டன் ஒரு வெளிநாட்டுப் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர் ஆகிய இரட்டை உலக சாதனைகளையும் அவர் படைத்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -