இங்கிலாந்து அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 டெஸ்ட் போட்டிகள் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து 2வது போட்டியில் தோற்கடித்த இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. அடுத்ததாக 3வது போட்டி ஜூன் 10ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. அதில் வெற்றி பெற்று முன்னிலையை அதிகரிக்கும் முனைப்புடன் இரு அணிகளும் விளையாடி வருகின்றன.
முன்னதாக இங்கிலாந்தில் வேகம், ஸ்விங் மற்றும் ஈரப்பதமான சூழ்நிலைகள் நிலவும். அதனால் வெப்பம் மிகுந்த, சுழலுக்கு சாதகமான மைதானங்களைக் கொண்ட ஆசிய கண்டங்களில் பயன்படுத்தும் குக்கபரா பந்துகளுக்குப் பதிலாக இங்கிலாந்தில் டுக் பந்துகள் பயன்படுத்தப்படுவது வழக்கமாகும். ஆனால் அந்தப் பந்துகள் விரைவாக தேய்ந்து மென்மையாக மாறி விடுவதாக களத்தில் விளையாடும் வீரர்கள் கருதுகின்றனர்.
ஸ்டோக்ஸ் கோரிக்கை:
அதனால் அடிக்கடி வேறு பந்து கொடுக்குமாறு இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் நடுவர்களை தொல்லை செய்வது வழக்கமாகும். அப்போது ஐசிசி அங்கீகரித்த சோதனை வளையத்திற்குள் பந்தை போட்டு நடுவர்கள் சோதிப்பார்கள். அதற்குள் பந்து வளையத்திற்குள் சென்று வந்தால் மாற்றப்படாது. ஒருவேளை அந்தப் வளையத்திற்குள் பந்து செல்லாவிட்டால் வேறு பந்து கொடுக்கப்படும்.
இந்நிலையில் குக்கபரா பந்துகளை விட டுக் பந்துகள் வித்தியாசமானது என்பதால் அதற்குத் தகுந்தார் போல் வடிவம் கொண்ட வேறு வளையத்தில் சோதிக்க வேண்டும் என்று ஐசிசிக்கு இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கோரிக்கை வைத்தார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் மட்டுமல்ல இங்கிலாந்துக்கு வெளிநாட்டு அணிகள் வரும் போதெல்லாம் அவர்கள் டுக் பந்துகளின் மென்மைத்தன்மை, வடிவம் ஆகியவற்றில் பிரச்சனை இருப்பதாக சொல்கின்றனர்”
எதிர்த்த பண்ட்:
“ஆனால் அதை சோதிக்கப்படும் வளையங்கள் டுக் வளையங்களாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. சில நேரங்களில் அது பொதுவானது. இல்லையென்றாலும் நீங்கள் சமாளிக்க வேண்டும். ஆனால் அனைத்து அணிகளும் அந்த வளையங்களால் தடுமாறுவது போல் தெரிகிறது” என்று கூறினார். இருப்பினும் அதே செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற ரிஷப் பண்ட் அந்தக் கருத்தை எதிர்த்தார்.
இதையும் படிங்க: அவரு மேட்ச்ல ஆடாம வெளியில் இருப்பதை என்னால பாக்க முடியல.. இந்திய வீரர் குறித்து – கெவின் பீட்டர்சன் பேட்டி
அனைத்து பந்துகளையும் ஒரே சோதனை வளையத்தில் சோதிக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார். இது பற்றி பண்ட் பேசியது பின்வருமாறு. “குக்கபரா அல்லது டுக் ஆகிய எந்த பந்துகளாக இருந்தாலும் அதை சோதிக்கும் வளையம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். என்னைக் கேட்டால் அது இன்னும் கொஞ்சம் சிறிதாக இருந்தால் நன்றாக இருக்கும் (ஜாலியாக சொல்கிறார்). ஏனெனில் அந்த பந்துகள் நிறைய சிக்கல்களை கொடுக்கிறது” என்று கூறினார்.



