- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சுந்தர், ஜடேஜா சதத்தை தடுக்கும் வகையில் ட்ராவை அழைத்தது ஏன்? பென் ஸ்டோக்ஸ் விளக்கத்துடன் பாராட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியை போராடி டிரா செய்தது. மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் 3வது இன்னிங்ஸில் 311 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் களமிறங்கிய இந்தியாவுக்கு சுதர்சன், ஜெய்ஸ்வால் ஆரம்பத்திலேயே டக் அவுட்டானார்கள். அதனால் 0/2 என சரிந்த இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்கும் என்று ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினார்கள்.

அப்போது நங்கூரமாக விளையாடிய கேப்டன் கில் சதத்தை அடித்து 103, ராகுல் 90 ரன்கள் அடித்து அசத்தார்கள். அடுத்து விளையாடிய ஜடேஜா மற்றும் சுந்தர் அரை சதத்தை கடந்து இந்தியாவை இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றி முன்னிலை பெற்றுக் கொடுத்தார்கள். ஒரு கட்டத்தில் இங்கிலாந்துக்கு தொல்லையாக மாறிய அந்த ஜோடி சதத்தை நெருங்கியது.

- Advertisement -

ட்ரா செய்ய அழைத்த ஸ்டோக்ஸ்:

ஆனால் அப்போது இனிமேலும் இந்தியாவை வீழ்த்த முடியாது என்பதை உணர்ந்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் போட்டியை முடித்துக் கொள்வதாக கை கொடுத்தார். இருப்பினும் அதற்கு கேப்டன் கில் சம்மதம் தெரிவிக்காததால் தொடர்ந்து விளையாடிய ஜடேஜாவும், சுந்தரும் தகுதியான சத்தத்தை அடித்தார்கள். அவர்கள் சதத்தை அடித்ததும் போட்டியை முடித்துக் கொள்வதாக அறிவித்த இந்தியா கடைசிப் போட்டியை வென்றால் தொடரை சமன் செய்யலாம் என்ற நிலைக்கு வந்துள்ளது.

இந்நிலையில் தங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்களை கடைசி மணி நேரத்தில் பந்து வீச வைத்து காயமடைய வைக்க விரும்பாததாலேயே இந்தியாவை முன்கூட்டியே டிரா செய்ய அழைத்ததாக ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியா அனைத்து விதமான கடினமான வேலையையும் செய்தார்கள். சுந்தர் மற்றும் ஜடேஜா ஆகியோர் அற்புதமாக விளையாடினார்கள்”

- Advertisement -

ஸ்டோக்ஸ் விளக்கம்:

“அதன் காரணமாக ஒரே ஒரு முடிவு மட்டுமே (ட்ரா) கிடைக்கப் போகிறது என்று தெரிந்தது. அது போன்ற சூழ்நிலையில் என்னுடைய பெரிய வேகப்பந்து வீச்சாளர்களை இன்னும் ஒரு மணி நேரம் விளையாட வைத்து காயமாக்கும் ரிஸ்கை எடுக்க விரும்பவில்லை. இந்திய அணி அழுத்தத்திற்கு நிகராக விளையாடினார்கள். ஜடேஜா சுந்தர் இருவரும் சதத்தை அடிக்க விரும்பினார்கள். ஒரு போட்டி மீதம் இருப்பதால் என்னுடைய பவுலர்களை நான் ரிஸ்க் எடுக்க வைக்க விரும்பவில்லை”

இதையும் படிங்க: ஜடேஜா, சுந்தருக்காக.. இதை செஞ்சு தோல்விலிருந்து தப்பிச்சோம்.. 5வது மேட்ச்ல இங்கிலாந்துக்கு பதிலடி தருவோம்.. கில் பேட்டி

“ஜடேஜா, ஜடேஜா ஆகியோர் பேட்டிங் செய்த விதத்திற்கு பாராட்டுக்கள். அவர்கள் பாராட்டுக்கு தகுதியானவர்கள்” என்று கூறினார். மொத்தத்தில் இளம் இந்திய அணி படுதோல்வியிலிருந்து மீண்டு போட்டியை ட்ரா செய்தது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. இதே வேகத்தில் கடைசி போட்டியில் வென்று தொடரை சமன் செய்ய இந்தியா தயாராக உள்ளது.

- Advertisement -