ஜடேஜா, சுந்தருக்காக.. இதை செஞ்சு தோல்விலிருந்து தப்பிச்சோம்.. 5வது மேட்ச்ல இங்கிலாந்துக்கு பதிலடி தருவோம்.. கில் பேட்டி

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக மான்செஸ்டரில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியை போராடி டிரா செய்தது. குறிப்பாக 3வது இன்னிங்ஸில் 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால், சுதர்சன் டக் அவுட்டானார்கள். அதனால் 0/2 என சரிந்த இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்கும் என்று ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தார்கள்.

அப்போது நங்கூரமாக விளையாடிய கேப்டன் கில் சதத்தை அடித்து 103, ராகுல் 90 ரன்கள் அடித்து இந்தியாவை காப்பாற்றினர். அதே போல வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜடேஜா நங்கூரமாக விளையாடி இந்தியாவின் தோல்வியைத் தடுத்து முன்னிலை பெற்றுக் கொடுத்தனர். அப்போது போட்டியை முடித்துக் கொள்ளலாம் என்று இங்கிலாந்து கை கொடுத்த வந்த போதிலும் கேப்டன் கில் மறுப்பு தெரிவித்ததால் தொடர்ந்து விளையாடிய ஜடேஜா, சுந்தர் சதத்தை அடித்தார்கள்.

- Advertisement -

சுந்தர், ஜடேஜாவுக்காக:

இந்நிலையில் இப்போட்டியை ஒவ்வொரு பந்தாக விளையாடி ட்ரா வேண்டும் என்று முடிவெடுத்ததாக என்று கேப்டன் கில் பாராட்டியுள்ளார். அடுத்தப் போட்டியில் வென்று தொடரை சமன் செய்து இங்கிலாந்துக்கு பதிலடி கொடுப்போம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த சில நாட்களாக நாங்கள் மிகப்பெரிய அழுத்தத்திற்குள் தள்ளப்பட்டோம். அந்த சூழ்நிலையில் வெளிப்படுத்திய பேட்டிங்கை பார்த்து மகிழ்கிறேன்”

“இவை அனைத்தும் பிட்ச்சை கணக்கில் வைத்துக் கொள்ளாமல் விளையாட வேண்டும். கடைசி நாளில் ஒவ்வொரு பந்தும் வித்தியாசமாக இருந்தது. எனவே நாங்கள் ஒவ்வொரு பந்தாக எடுத்துக்கொண்டு முடிந்த வரை போட்டியை கடைசி வரை எடுத்துச் செல்ல வேண்டும் என்று பேசினோம். ஜடேஜா, சுந்தர் சிறப்பாக பேட்டிங் செய்ததால் 90களில் விளையாடிய போது சதத்துக்கு தகுதியானவர்கள் என்று கருதினோம்”

- Advertisement -

கில் நம்பிக்கை:

“இத்தொடரில் அனைத்து போட்டிகளுமே கடைசி நாள் வரை சென்றுள்ளது. எனவே ஒவ்வொரு போட்டியும் நிறைய பாடங்களைக் கொடுத்துள்ளது. அடுத்தப் போட்டியை வென்று நாங்கள் தொடரை சமன் செய்வோம் என்று நம்புகிறோம். கடந்த காலங்களில் ரன்களை அடித்தது முக்கியமல்ல. நாட்டுக்காக ஒவ்வொரு முறையும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் போது நடுக்கங்கள் இருக்கும். அது நான் எந்தளவுக்கு நாட்டுக்காக விளையாட விரும்புகிறேன் என்பதைச் சொல்கிறது”

இதையும் படிங்க: நேத்தே செஞ்சுருக்கலாமே? ஜடேஜா, சுந்தர் சதத்தை தடுக்க ஸ்டோக்ஸ் செய்த வேலை.. கெஞ்சிய கிராவ்லி

“முதல் இன்னிங்ஸில் நல்ல ஸ்கோர் அடித்தோம். ஆனால் நன்றாக செட்டிலான எங்கள் பேட்ஸ்மேன்களில் யாராவது ஒருவர் பெரிய ஸ்கோர் அடித்தால் மட்டுமே வெற்றியை எதிரணியிடம் இருந்து பறிக்க முடியும். துரதிஷ்டவசமாக அது நடைபெறவில்லை. ஆனால் அதை 2வது இன்னிங்ஸில் செய்ததில் மகிழ்ச்சி. பும்ரா அடுத்தப் போட்டியில் விளையாடுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். போட்டியை வெல்லும் வரை எனக்கு டாஸ் முக்கியமல்ல” என்று கூறினார்.

Advertisement