முடிஞ்சா அடிச்சிக்கோங்க.. ஒரேயொரு மாற்றத்தை மட்டும் செய்து இந்திய அணிக்கு சவால் விட்ட – இங்கிலாந்து கேப்டன்

Stokes
- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இங்கு நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணியானது இந்த தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது மார்ச் 7-ம் தேதி தரம்சாலா நகரில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியை வெற்றியுடன் ஆரம்பித்த இங்கிலாந்து அணி அடுத்ததாக மூன்று தொடர் தோல்விகளை சந்தித்து இந்த தொடரையும் கோட்டை விட்டது.

- Advertisement -

இதன் காரணமாக கடைசி போட்டியில் வெற்றி பெற்று கௌரவமாக நாடு திரும்ப காத்திருக்கிறது. இதன் காரணமாக இங்கிலாந்து அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தங்களது கடைசி போட்டிக்கான அணியில் ஒரே ஒரு மாற்றத்தை மட்டுமே நிகழ்த்தி இந்திய அணிக்கு சவால் விடுக்கும் வகையில் போட்டிக்கு முந்தைய நாளிலேயே பிளேயிங் லெவனை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் கடந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் போது விளையாடிய வேகப்பந்து வீச்சாளரான ஒல்லி ராபின்சன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மீண்டும் வேகப்பந்து வீச்சாளரான மார்க் உட் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதனை தவிர்த்து வேறு எந்த மாற்றமும் அணியில் செய்யப்படவில்லை.

இதையும் படிங்க : என்னாங்க அநியாயம் இது.. வங்கதேசத்துக்கு தீர்ப்பை மாற்றிய அம்பயர்? கொந்தளித்த இலங்கை வீரர்கள்.. நடந்தது என்ன

எப்பொழுதுமே போட்டிக்கு முந்தைய நாளில் பிளேயிங் லெவனை வெளியிட்டு போராட்டத்திற்கு தயாராகும் இங்கிலாந்து அணி இம்முறையும் அதே போன்ற செயல்பாட்டையே வெளிப்படுத்தியுள்ளது. ஆனாலும் இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று அவர்களை வீழ்த்த காத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement