என்னாங்க அநியாயம் இது.. வங்கதேசத்துக்கு தீர்ப்பை மாற்றிய அம்பயர்? கொந்தளித்த இலங்கை வீரர்கள்.. நடந்தது என்ன

BAN vs SL Umpire
- Advertisement -

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டியில் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த சூழ்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 2வது போட்டி மார்ச் 6ஆம் தேதி வங்கதேசத்தின் சைலட் நகரில் நடைபெற்றது.

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 20 ஓவர்களில் போராடி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக குஷால் மெண்டிஸ் 36, கமிண்டு 37, ஏஞ்சேலோ மேத்தியூஸ் 32* ரன்கள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த வங்கதேசத்துக்கு துவக்க வீரர்கள் லிட்டன் தாஸ் 36, சௌமியா சர்க்கார் 26 ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர்.

- Advertisement -

அநியாயமான தீர்ப்பு:
அதை வீணடிக்காமல் அடுத்ததாக வந்த கேப்டன் சாந்தோ அதிரடியாக 53* (38) தவ்ஹீத் ஹ்ரிடாய் 32* (25) ரன்கள் எடுத்து வங்கதேசத்தை 18.1 ஓவரிலேயே 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதன் காரணமாக 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து வங்கதேசம் பதிலடி கொடுத்துள்ளது. அதனால் இலங்கை சார்பில் அதிகபட்சமாக பதிரனா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

முன்னதாக இந்த போட்டியில் 166 ரன்களை சேசிங் செய்த வங்கதேசத்திற்கு பினுரா பெர்னாண்டோ வீசிய 3வது ஓவரின் முதல் பந்தை வங்கதேச துவக்க வீரர் சௌமியா சர்க்கார் எதிர்கொண்டார். இருப்பினும் அதை சரியாக அடிக்காமல் எட்ஜ் கொடுத்த அவர் விக்கெட் கீப்பிரிடம் கேட்ச் கொடுத்தார். அதை இலங்கை அணியினர் கேட்ட போது களத்தில் இருந்த நடுவரும் அவுட் கொடுத்து விட்டார். ஆனால் அதில் திருப்தியடையாத சௌமியா சர்க்கார் ரிவியூ செய்தார்.

- Advertisement -

அதை 3வது நடுவர் சோதித்த போது அல்ட்ரா எட்ஜ் தொழிநுட்பத்தில் பேட்டின் மீது பந்து உரசியது தெளிவாக ஸ்பைக்கில் தெரிந்தது. அதனால் அவுட் கொடுக்க வேண்டிய 3வது நடுவர் பகல் கொள்ளையைப் போல பந்துக்கும் பேட்டுக்கும் இடையே இடைவெளி இருப்பதாக சொல்லி தீர்ப்பை பற்றி நாட் அவுட் கொடுப்பதாக அறிவித்தார். அதனால் கொந்தளித்த இலங்கை வீரர்கள் என்னாங்க இது? அநியாயம் என்று களத்தில் இருந்த நடுவருடன் வாக்குவாதம் செய்தனர்.

இதையும் படிங்க: டெல்லி அணியில் பாத்துருக்கேன்.. வித்யாசமான அஸ்வின் அதுல மாஸ்டர்.. 100வது போட்டிக்கு முன் பாராட்டிய பாண்டிங்

அதற்கு 3வது நடுவர் தம்முடைய தீர்ப்பை மாற்றி விட்டதால் தம்மால் எதுவும் செய்ய முடியாது என்று களத்தில் இருந்த நடுவர் பதிலளித்து மழுப்பினார். அதைத்தொடர்ந்து பவுண்டரி எல்லைக்கு அருகே வந்த 3வது நடுவரிடம் இலங்கை பயிற்சியாளர் பேசிப் பார்த்தார். இருப்பினும் கொடுத்த தீர்ப்பை மாற்ற முடியாது என்பதில் 3வது நடுவர் உறுதியாக இருந்தார். அதனால் இலங்கை வீரர்கள் 5 நிமிடம் வாக்குவாதம் செய்தும் களத்தில் இருந்த நடுவரும் தீர்ப்பை மாற்றி வழங்கவில்லை. கடைசியில் தோல்விக்கு அது ஒரு காரணமாக அமைந்ததால் தற்போது வங்கதேசத்துக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கிய 3வது நடுவரை இலங்கை ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

Advertisement