டெல்லி அணியில் பாத்துருக்கேன்.. வித்யாசமான அஸ்வின் அதுல மாஸ்டர்.. 100வது போட்டிக்கு முன் பாராட்டிய பாண்டிங்

Ricky Ponting 2
- Advertisement -

சென்னையை சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மார்ச் 7ஆம் தேதி தரம்சாலாவில் இங்கிலாந்துக்கு எதிராக தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடி சாதனை படைக்க உள்ளார். உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி தோனி தலைமையில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 2011ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாக களமிறங்கினார்.

அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ஹர்பஜன் சிங்கை ஓரம் கட்டும் அளவுக்கு அசத்தத் துவங்கிய அவர் இதுவரை 99 போட்டிகளில் 507* விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுத்த இரண்டாவது இந்திய பவுலர் என்ற சாதனை படைத்துள்ள அவர் 3000 ரன்கள் மற்றும் 500 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற தனித்துவமான சாதனையும் படைத்துள்ளார்.

- Advertisement -

பாண்டிங் பாராட்டு:
அந்த வகையில் தமிழ்நாட்டில் இருந்து பிறந்து இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டியில் விளையாடும் முதல் வீரர் என்ற மாபெரும் சாதனை படைத்துள்ள அஸ்வின் தமிழகத்திற்கும் தமிழக ரசிகர்களுக்கும் மற்றொரு பெருமை சேர்த்துள்ளார் என்றே சொல்லலாம். இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் மாஸ்டர் ஆஃப் ஸ்பின் என்று ஆஸ்திரேலியாவை சேர்ந்த நட்சத்திர முன்னாள் ஜாம்பவான் கேப்டன் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார்.

மேலும் ஐபிஎல் தொடரில் சில வருடங்கள் டெல்லி அணியில் பயிற்சியாளராக இருந்த போது அஸ்வின் எப்போதும் வித்தியாசமானவற்றை செய்ய முயற்சித்ததாகவும் பாண்டிங் தெரிவித்துள்ளார். அப்படி அனுபவத்தால் முன்னேறி 100 டெஸ்ட் போட்டியில் விளையாடும் அஸ்வினுக்கு ஐசிசி இணையத்தில் அவர் பாராட்டு தெரிவித்தது பின்வருமாறு. “எந்த வகையான சூழ்நிலையிலும் அஸ்வின் மாஸ்டர் ஆஃப் ஸ்பின்”

- Advertisement -

“டெல்லி அணியில் சில வருடங்கள் அவருக்கு பயிற்சியாளராக செயல்படும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவருடன் வேலை செய்ததை நான் விரும்பினேன். அவர் கிரிக்கெட்டைப் பற்றி நிறைய தேற்றங்கள் மற்றும் தத்துவங்களை வைத்துள்ளதை நான் மிகவும் விரும்புகிறேன். அவர் எப்போதுமே தன்னுடைய வழியில் ஏதாவது வித்தியாசமாக செய்வார். அதே சமயம் அவர் ஒரு பவுலராகவும் தொடர்ந்து முன்னேறினார்”

இதையும் படிங்க: அஸ்வின் அரிதான வீரர்.. 17 – 19 வயசுல எங்களோட கேரியர் தலைகீழாக மாறிடுச்சு.. ரோஹித் பாராட்டு

“அதுவே அவரைப் பற்றி நான் விரும்பும் விஷயமாகும். நான் பயிற்சியாளராக இருந்தபோது அவர் தன்னுடைய பவுலிங் ஆக்சன் அல்லது பந்தை பிடிக்கும் விதம் அல்லது பந்தை வித்தியாசமாக வெளியிடுவது போன்றவற்றில் எப்போதும் சில மாற்றங்களை செய்ய முயற்சிப்பதை பார்த்துள்ளேன். அவர் சிறந்து விளங்குவதற்கான வழிகளை கண்டறிவதற்கு எப்போதுமே தயங்கியவராக இருந்ததில்லை” என்று கூறினார்.

Advertisement